நீருள்ள வாளியில், காற்றுப்புகாத
அடைப்பானால் மூடப்பட்ட காலி பிளாஸ்டிக்
பாட்டில் ஒன்று கீழ்நோக்கி அழுத்தப்படுகிறது.
பாட்டில் கீழ்நோக்கி தள்ளப்படும்போது, அதன்
அடிப்பகுதியில் செயல்படும் விசையானது
அதிகரிக்கிறது. இதனை கீழுள்ள வரைபடம்
விளக்குகிறது. இதற்கான காரணம் என்ன ?
அ) அதிக பருமனுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது
ஆ) அதிக எடையுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது
இ) ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கின்றது
ஈ) மேலே கூறிய யாவும்
Answers
Answered by
1
ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கின்றது
- பாய்மங்களுக்கு ஒரு குறிப்பிட்ட எடை உள்ளதால் அவை அழுத்தத்தினை கொண்டு உள்ளன.
- திரவங்களில் செயல்படும் அழுத்தம் ஆனது ஆழம், திரவத்தின் அடர்த்தி மற்றும் புவி ஈர்ப்பு முடுக்கம் முதலியனவைகளை சார்ந்தது.
- அழுத்தம் ஆனது பரப்பளவினை பொறுத்து மாறாது.
- திரவத்தின் அழுத்தமானது கொள்கலனின் வடிவத்தினை பொறுத்தது அல்ல.
- ஆனால் திரவத்தின் அழுத்தம் ஆனது ஆழத்தினை பொறுத்து மாறுகிறது.
- ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கும்.
- இதனாலே நீருள்ள வாளியில், காற்றுப் புகாத அடைப்பானால் மூடப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று கீழ் நோக்கி அழுத்தப்படுகிறது.
- பாட்டில் கீழ்நோக்கி தள்ளப்படும் போது, அதன் அடிப்பகுதியில் செயல்படும் விசையானது அதிகரிக்கிறது.
Similar questions