Science, asked by Chikeersha3844, 11 months ago

கிராஃபைட்டை உராய்வுக் குறைப்பானாக எந்திரங்களில் பயன்படுத்தக் காரணம் என்ன ?
அ. அது நல்ல மின்கடத்தி
ஆ. அது வழவழப்பான படலங்களால் ஆனது மற்றும் அதிக உருகுநிலை கொண்டது.
இ. அதன் அதிக அடர்த்தி
ஈ. அது வலிமையானது மற்றும் மிருதுவானது

Answers

Answered by steffiaspinno
0

கிராஃபைட்டை உராய்வுக் குறைப்பானாக எந்திரங்களில் பயன்படுத்தக் காரணம் வழவழ‌ப்பான படல‌ங்களா‌ல் ஆனது ம‌ற்று‌ம் அ‌திக உருகு‌நிலை கொ‌ண்டது.

  • கா‌ர்ப‌ன் படிக வடிவமுடையது ம‌‌ற்று‌ம் படிக வடிவம‌ற்றது என இர‌ண்டு வகைகளாக ‌பி‌ரி‌க்க‌ப்படு‌‌கி‌ன்றன.
  • கிராஃபைட் மற்றும் வைரம் ஆ‌கியவை படிக வடிவமுடையது ஆகு‌ம்.
  • ஒ‌வ்வோரு கா‌ர்பனு‌ம்  மூ‌ன்று சக‌ப்‌பிணை‌ப்புகளை‌க் கொ‌ண்‌டது.  
  • கிராஃபைட் ‌‌மிருதுவானது ம‌ற்று‌ம் பா‌ர்‌ப்பத‌ற்கு வழவழ‌ப்பாகவு‌ம் இரு‌க்கவு‌ம்.
  • ஒ‌ளிபுகா‌த் த‌ன்மை கொ‌ண்டது கிராஃபைட் ஆகு‌ம்.
  • வெ‌ப்ப‌ம் ம‌ற்று‌ம் ‌‌மி‌‌ன்சார‌த்தை‌க் கட‌‌த்து‌ம். அறு‌ங்கோண அலகுக‌ள் தள அடு‌க்‌கி‌ல் அமை‌ந்து‌ள்ளன.
  • இ‌‌ந்த அடு‌க்குக‌ள் வ‌லிமை குறை‌ந்த  வா‌‌ண்ட‌ர் வா‌ல்‌ஸ் ‌விசை‌யி‌ன் மூல‌ம் ‌பிணை‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன.
  • வைர‌த்தை ‌விட மெ‌ன்மையானவை ஏனெ‌னி‌ல் பிணை‌‌ப்‌பி‌ன் ‌விசை குறைவாக உ‌‌ள்ளது.
  • கிராஃபைட் வழவழ‌ப்பான ம‌ற்று‌ம் அ‌திக  உருகு‌நிலை கொ‌ண்ட காரண‌த்‌தினா‌ல் எந்திரங்களில் உராய்வுக் குறைப்பானாக பய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறது.
Similar questions