உயிர்த் துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன ?
Answers
Answered by
0
உயிர்த் துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை:
- தாவரங்களின் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்கள் இன்றியமையாததாக உள்ளன.
- நுண்ஊட்டத்தனிமங்கள் மற்றும் பெரும ஊட்டத்தனிமங்கள் ஆகியவை தாவரங்களுக்கு வழங்குவதற்காக நிலத்தில் சேர்க்கப்படுகின்றன. இவையே உரங்கள் ஆகும்.
- வேதியியல் சேர்மங்களான அம்மோனியம் நைட்ரேட், கால்சியம் பாஸ்பேட், யூரியா மற்றும் NPK உரங்கள் நிலத்தில் போடப்படுகின்றன. NPK உரங்கள் என்பவை நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் கலந்த கலவையாகும்.
- மண்ணின் தன்மையைப் பொறுத்து உரங்களின் வகை மாறுபடும். இதனால் இந்த உரங்கள் தனியாகவோ அல்லது கூட்டுப்பொருளாகவோ தாவரங்களுக்கு வழங்கப்படுகின்றன.
- உரங்களை மண்ணில் இடுவதால் தாவரங்கள் செழிப்பாக வளருகின்றன.எந்த நுண்ணுயிரிகளாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை.
- இவ்வாறு தாவரங்கள் வளர்வதில் இராசாயன உரங்களின் தேவை அதிகமாக உள்ளது.
Similar questions