Science, asked by reliance9021, 11 months ago

பயன்பாட்டின் அடிப்படையில் சாயங்களை வகைப்படுத்துக

Answers

Answered by steffiaspinno
3

பயன்பாட்டின் அடிப்படையில் சாயங்களை வகைப்படுத்துக;

 அமில சாயங்கள்;

  • அமிலத்தன்மை கொண்டவை.
  • விலங்கு தோல் செயற்கை இழை மற்றும் கம்பளி, பட்டு போன்ற புரத நூல் இழைகளை சாயம் ஏற்ற பயன்படுத்துகிறது

காரச் சாயங்கள் ;

  • காரத் தொகுதிகளை கொண்டுள்ளன.
  • தாவர மற்றும் விலங்கு  நூல் இழைகளை சாயமேற்ற பயன்படுகிறது.

மறைமுக சாயங்கள் ;

  • பருத்தி  ஆடைகளுடன் குறைவான ஈர்ப்புத் தன்மை கொண்டுள்ளதால் நேரடியாக அவற்றின்மீது படிவதில்லை.
  • இவை முதலில்  நிறமூன்றிகளுடன் செயல்படுத்தப்பட வேண்டும்.
  • நிறமூன்றி என்பது துணிகளுடன் இணைக்கப்பட்ட பிறகு சாயங்களுடன்  லேக் என்னும் கரையாத கூட்டுப்பொருள் உருவாக்கப்படக்கூடிய பொருளாகும்.
  • அலுமினியம், குரோமியம் மற்றும் இரும்பின் உப்புக்கள் நிறமூன்றிகளாக  பயன்படுகின்றது.

மறைமுக சாயங்கள்;

  • பருத்தி ,ரேயான் மற்றும் இதர  செல்லுலோஸ் இழைகளுடன்   அதிக கவர்ச்சி உடையன.
  • துணிகளுடன் உறுதியாக ஒட்டிக் கொள்வதால் நேரடியாக பயன்படுகிறது.
  • எடுத்துக்காட்டு,  காங்கோ சிவப்பு  

தொட்டிச் சாயம்;

  • பருத்தி இழைகளுக்கு மட்டுமே பயன்படக்கூடியது .
  • பட்டு  மற்றும் கம்பளி இழைகளுக்கு  பயன்படாது.  
  • இந்த சாயமிடுதல் தொடர்ச்சியான செயல்பாடு ஆகும்.
  • செயல்படுத்த தொட்டி எனும் பெரிய கலன் தேவைப்படுவதால்
  • இவை தொட்டி சாயம் எனப்படும். எடுத்துக்காட்டு, இண்டிகோ.
Similar questions