Science, asked by parshu6394, 11 months ago

சில வறண்ட நிலத்தாவரங்களில் இலைகளானவை முட்களாக
மாற்றமடைந்து காணப்படும், இதன் காரணம்
அ. நீராவிப்போக்கின் வீதத்தினைக் குறைப்பதற்கு
ஆ. நீரைச் சேமிப்பதற்கு
இ. நீரைப் பயன்படுத்துவதைக் குறைப்பதற்கு
ஈ. இவையனைத்தும்

Answers

Answered by steffiaspinno
0

சில வறண்ட நிலத்தாவரங்களில் இலைகளானவை முட்களாக  மாற்றமடைந்து காணப்படும், இதன் காரணம் - இவையனைத்தும்

  • வறண்ட நிலத்தாவரங்கள் என்பவை குறைந்த அளவு நீர் மற்றும் பாலைவனம் போன்ற வாழ்விடங்களில் இவை காணப்படும்.  
  • வறண்ட நிலத்தாவரங்கள் காலமாற்றதிற்கு ஏற்ற சில அமைப்புகளையும் மற்றும் உடலியல் பண்புகளையும் உருவாக்குகிறது.
  • அவற்றிற்கு தேவையான அளவு நீரை சுற்றுப்புறத்தில் உறிஞ்சி எடுத்துக்கொள்ளும்.
  • உறிஞ்சி எடுத்த நீரை அவற்றின் உறுப்புகளில் தேக்கி வைத்துகொள்ளும்.
  • நீராவியின் வேகத்தை  குறைக்கும்.
  • நீரை குறைவாக பயன்படுத்தும். அதாவது நுகர்வு செய்யும்.

வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்புகள்:

  • இவற்றின் வேர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து காணப்படும்.
  • ஆழமாக வளர்ந்து நீர் இருக்கும் அடுக்குகளுக்கு செல்கிறது.
  • சதைபற்று மிகுந்த பாரன்கைமா திசுக்களில் நீரை சேமித்து வைக்கிறது.
  • (எ.கா) சோற்றுக் கற்றாழை மற்றும் சப்பாத்திக்கள்ளி போன்றவை.
  • இலைகள் மெழுகுப் பூச்சுடன் கூடி காணப்படும்.

         (எ.கா) கருவேலமரம்.

  • சில தாவரங்களில் இலைகள் முட்களாகவும் மாறும் தன்மை பெற்றிருக்கும்.  எ.கா சப்பாத்திக்கள்ளி.
Answered by shivam1104
0

Answer:

sorry I didn't understand that language plz write in english and hindi language then I will help you promise

Similar questions