தனித்து வாழும் பாக்டீரியாவான சூடோமோனாஸ் பாக்டீரியாக்கள் நைட்ரஜன் சுழற்சியில் --------------- க்கு
காரணமாக உள்ளன .
அ.அம்மோனியாவாதல்
ஆ. நிலைப்படுத்துதல்
இ. நைட்ரேட்டாதல்
ஈ. நைட்ரேட்வெளியேற்றம்
Answers
Answered by
0
தனித்து வாழும் பாக்டீரியாவான சூடோமோனாஸ் பாக்டீரியாக்கள் நைட்ரஜன் சுழற்சியில் நைட்ரேட் வெளியேற்றம் காரணமாக உள்ளன
நைட்ரஜன் சுழற்சி:
- நைட்ரஜன் என்பது உயிர்வாழ தேவையான அனைத்து உயுரினங்களுக்கும் முக்கியமான முதல்நிலை ஊட்டசத்து ஆகும்.
- வளிமண்டலம் ஆனது 78% நைட்ரஜன் உள்ள பெரிய மூலமாக இருக்கும்.
- வளிமண்டலம் ஆனது வாயுநிலையில் இருக்கும் நைட்ரஜனை விலங்குகள் மற்றும் தாவரங்களால் நேரடியாக பயன்படுத்த முடியாது.
- நைட்ரஜன் சுழற்சியில் நிலை நிறுத்தல், உட்கிரகித்தல், நைட்ரேட்டாதல் மற்றும் நைட்ரஜன் வெளியேற்றம் போன்ற செயல்பாடுகள் உள்ளன.
நைட்ரேட் வெளியேற்றம்:
- நைட்ரேட்டாதல் செயல்முறையில் நைட்ரேட் அயனிகள் உருவாக்கப்படுகிறது.
- இந்த நைட்ரேட் அயனிகள் மண்ணிலிருந்து ஒடுக்கபட்டு வாயுநிலைக்கு மாறி வளிமண்டலத்தை அடையும் முறை நைட்ரேட் வெளியேற்றம் என அழைக்கபடுகிறது.
- சூடோமோனஸ் என்ற பாக்டீரியாக்கள் மண்ணில் தனித்து வாழக்கூடியவை.
- சூடோமோனஸ் சிற்றினங்களால் இந்த செயல் நடைபெறும்.
Similar questions