Science, asked by Anya2222, 8 months ago

அக்வாபொனிக்ஸ் என்ற தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி தாவரங்களை
வளர்த்து அதன் வேர்களுக்கு காற்றில் உள்ள ஈரப்பத்தினை அளிக்கலாம்.

Answers

Answered by steffiaspinno
0

இக்கூற்று தவறாகும்.

ஏரோபோனிக்ஸ் :

  • ஏரோபோனிக்ஸ் என்பது வளிமண்டல வேளாண்மை என்றும்  அழைக்கப்படுகிறது.
  • இது ஒரு காற்று ஊடக தாவர வளர்ப்பு முறையாகும்.
  • மேலும் வளிமண்டல வேளாண்மை என்பது அதிநவீன முறையிலான மண்ணில்லா வேளாண்மைத் தோட்டமாகும்.
  • காற்றானது முதன்மையான வளர் ஊடகமாகும். தாவரத்தின் வேர்கள் தொங்கவிடப்படுகின்றன.
  • பின்பு பனிபோல ஊட்டச்சத்துகள் காற்றில் தூவப்படுகின்றன.
  • இவற்றை உறிஞ்சிக் கொண்டு தாவரங்கள் வாழ்கின்றன.  

அக்வாபோனிக்ஸ்:

  • அக்வாபோனிக்ஸ் என்பது கூட்டு உருவாக்க முறையாகும்.
  • இது நீர்வாழ் உயிரின தாவர வளர்ப்பு முறையாகும்.
  • அதாவது தாவரங்களை நீரில் வளர்க்கும் பழமையான முறையையும், மண்ணில்லா வேளாண் முறையையும் சேர்த்து இணைத்து உருவாக்கப்பட்ட புதிய முறையாகும்.
  • எனவே அக்வாபோனிக்ஸ் முறையை பயன்படுத்தி வேர்களுக்கு காற்றில் உள்ள ஈரப்பத்தினை அளிக்க முடியாது.  
Similar questions