சுவாச மண்டலத்தோடு தொடர்புடைய, அதிக நாட்கள் காணப்படும் நோய்களைப் பெயரிடுக
Answers
Answered by
0
சுவாச மண்டலத்தோடு தொடர்புடைய, அதிக நாட்கள் காணப்படும் நோய்கள்:
கக்குவான் இருமல் மற்றும் காசநோய்
- காசநோய் மற்றும் கக்குவான் இருமல் ஆகியவை சுவாசித்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களாகும்,
- காச நோயானது மைக்கோபாக்டீரியம் டியுபர்குளோசிஸ் என்னும் பாக்டீரியாவால் உருவாகிறது.
- இது ஒரு தொற்று நோயாகும்.
- தொடர்ந்து நெஞ்சு வலி, இருமல் , உடல் எடைக் குறைவு மற்றும் பசிக்காமல் இருத்தல் ஆகியவை காசநோயின் அறிகுறிகளாகும்.
- இந்த காசநோயினால் பாதிக்கப்படும் முதன்மையான உறுப்பு நுரையீரல் ஆகும்.
- போர்டெடெல்லா பெர்டுசிஸ் என்னும் பாக்டீரியாவால் கக்குவான் இருமல் நோய் ஏற்படுகிறது.
- மிதமான காய்ச்சல், அதிக இருமல் மற்றும் மூ ச்சு வாங்குதல் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.
- அசுத்தமான காற்றை சுவாசிப்பதன் மூலம் கக்குவான் இருமல் மற்றும் காசநோய் ஆகியவை ஏற்படுகிறது.
- இவை அதிக நாட்கள் சுவாச மண்டலத்தோடு தொடர்புடையவை ஆகும்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Computer Science,
5 months ago
Science,
11 months ago
Science,
11 months ago
Psychology,
1 year ago
Geography,
1 year ago