சூரிய மண்டலம் என்றால் என்ன?
Answers
Answered by
0
சூரிய மண்டலம்:
- விண்வெளியில் அமைந்துள்ள சூரியன் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பொருட்கள் அனைத்துமே சூரிய மண்டலம் என்று அழைக்கப்படுகின்றன.
- சூரிய மண்டலத்தில் உள்ள எட்டுக்கோள்கள். சிறுகோள்கள், வால் விண்மீன்கள், விண்கற்கள், துணைக்கோள்கள் போன்றவை தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனை மையமாக கொண்டும் சுற்றி வருகின்றன.
- சூரியனிடமிருந்து வரும் வெப்பமானது அதிகமாக உள்ளது ஏனெனில் சூரியன் அகச் சிவப்புக் கதிர்களை வெளியிடுகிறது.
- புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை சூரிய குடும்பத்தில் உள்ள எட்டுக் கோள்களாகும்.
- இவை நீள்வட்டவடிவான சுற்றுப்பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன.
- கோள்கள் அவை அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து உட்புறக் கோள்கள் என்றும் வெளிப்புற கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
Similar questions