கூற்று: ஜார்ஜியா தவிர ஏனைய காலனிகளைச்
சேர்ந்த பிரதிநிதிகள் பொறுத்து கொள்ளமுடியாதச்
சட்டங்கள் நீக்கப்பட வேண்டுமெனக் கோரினர்.
காரணம்: அதுவரையிலும் ஆங்கிலப்
பொருட்களைப் புறக்கணிப்பது என காங்கிரஸ்
முடிவு செய்தது.
(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம்
கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால்
காரணம் கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி. காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answers
Answered by
0
Answer:
I can't understand your language
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
- பாஸ்டன் கொலையினை தொடர்ந்து 1773ல் கிளர்ச்சி செய்யும் 100 நபர்கள் பூர்வீக அமெரிக்க மக்களைப் போல வேடம் பூண்டு பாஸ்டன் துறைமுகத்தில் தேயிலையைக் கொண்டு வந்திருந்த மூன்று கப்பல்களில் ஏறி 342 பெட்டிகளைக் கடலுக்குள் வீசி எறிந்தனர்.
- இந்நிகழ்வு பாஸ்டன் தேநீர் விருந்து என அழைக்கப்பட்டது.
- இதனால் கோபம் கொண்ட இங்கிலாந்து பாராளுமன்றம் 1774 ஆம் ஆண்டு பொறுத்துக்கொள்ள முடியாத சட்டங்களை இயற்றியது.
- இதன் விளைவாக ஜார்ஜியா தவிர ஏனைய காலனிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பிலடெல்பியாவில் முதன்முதலில் பொது மாநாட்டைக் கூட்டினர்.
- இதில் பொறுத்து கொள்ள முடியாதச் சட்டங்கள் நீக்கப்பட வேண்டுமெனக் கோரினர்.
- அதுவரையிலும் ஆங்கிலப் பொருட்களைப் புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது.
Similar questions