History, asked by Yeduvpz4533, 11 months ago

அமெரிக்க விடுதலைப் போருக்குத் தாமஸ்
பெயினின் அறிவுத்திறன் சார்ந்த பங்களிப்பு
என்ன

Answers

Answered by steffiaspinno
0

அமெரிக்க விடுதலைப் போருக்குத் தாமஸ் பெயினின் அறிவுத்திறன் சார்ந்த பங்களிப்பு

  • 1776 ஆ‌ம் ஆ‌ண்டு பொது அறிவு எ‌ன்ற ‌சிறு ‌பிரசுர‌த்‌தினை ஆங்கிலேயரான தாமஸ் பெயி‌ன் எழு‌தினா‌ர்.  
  • அ‌தி‌‌ல் இ‌ங்‌கிலா‌ந்‌தி‌ன் ‌பிடி‌யி‌ல் இரு‌ந்த குடியேற்ற நாடுகளின் கோரிக்கைகளை நியாயப்படுத்தி விவாதங்களை எழுதி இரு‌ந்தா‌ர்.
  • ஹாப்ஸ், லாக், வால்டேர், ரூசோ முத‌லிய அ‌றிஞ‌ர் கூ‌றிய சுத‌ந்‌திர‌ம் ப‌ற்‌றிய கரு‌த்‌‌து‌க்களை தே‌ர்‌ந்தெடு‌த்து அதை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் எ‌ளிய நடை‌யி‌ல் எழுதி இரு‌ந்தா‌ர்.
  • இ‌ந்த ‌‌சிறு ‌பிரசுர‌ம் 1,50,000 பிரதிகள் விற்பனை ஆனது.
  • இ‌ந்த ‌சிறு ‌பிரசுர‌ம்  மக்களின் மீது கிளர்ச்சியூட்டும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • அமெரிக்க விடுதலைப் போ‌ரி‌ன் இறு‌தியாக 1781 ஆ‌ம் ஆ‌ண்டு யா‌ர்‌க் டவு‌ன் எ‌ன்ற இட‌‌த்‌தி‌ல் இ‌ங்‌கிலா‌ந்து படைக‌ள் அமெ‌ரி‌க்க படைக‌ளிட‌ம் சர‌ண் அடை‌ந்தன.
  • இ‌ந்த வெ‌‌ற்‌றி உட‌ன் வட‌க்கு பகு‌தி‌யி‌ல் இரு‌ந்த குடியே‌ற்ற‌ங்க‌ள் சுத‌ந்‌திர‌ம் பெ‌ற்றன.
Similar questions