"சோஷலிச கருத்துக்கள் உருப்பெற
தொழில்புரட்சியே முகாந்திரம் அமைத்தது" –
ஆதாரப் பின்புலத்தோடு உறுதிப்படுத்துக
Answers
Answered by
0
சோஷலிச கருத்துக்கள் உருப்பெற தொழில்புரட்சியே முகாந்திரம் அமைத்தது
- தொடக்க காலங்களில் ஒன்று இணைக்கப்படாமல் இருந்த தொழிலாளர்கள் முழுக்க முழுக்க முதலாளிகளின் தயவினை நம்பியே அடிமைகள் போன்று வாழ்ந்தனர்.
- அதிக நேர வேலை, குறைந்த சம்பளம், தரக்குறைந்த உணவுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
- எனவே தொழிலாளர்களை ஒன்று இணைத்து தொழிற்சங்கங்களை நிறுவ எண்ணினர்.
- ஆனால் ஆரம்பத்தில் இங்கிலாந்து அரசு தொழிற்சங்கங்களை சட்ட விரோதமானவை என அறிவித்தது.
- தொழிலாளர்களுக்காக போராடியவர்கள் சிறையில் அடைத்தல், நாடு கடத்தப்படுதல் போன்ற இன்னலை சந்தித்தனர்.
- இறுதியில் 1824 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தொழிற்சங்கங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது.
- தொழிற்சங்கங்கள் பெருமளவிலான வளர்ச்சியினைப் பெற்று முதலாளித்துவத்திற்கு எதிரான சக்தியாக மாறியது.
- இது சோஷலிசக் கருத்தினை உருவாக்க தளமிட்டது.
Similar questions