பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில்
ஐரோப்பியக் கண்டத்திற்குள் தொழிற்துறையில்
வலிமையான சக்தியாக நாடு
உருவாகியிருந்தது.
(அ) பிரான்ஸ் (ஆ) ஸ்பெயின்
(இ) ஜெர்மனி (ஈ) ஆஸ்திரியா
Answers
Answer:
hey mate
Explanation:
ஜெர்மனி (Germany, [ˈdʒɜːmənɪ] (உதவி·விவரம்)), அல்லது ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு (ஜெர்மானியம்: Bundesrepublik Deutschland (உதவி·விவரம்), IPA: [ˈbʊndəsʁepuˌbliːk ˈdɔʏtʃlant]), என்பது நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் வடக்கே வட கடல், டென்மார்க், பால்ட்டிக் கடல்; கிழக்கே போலந்து, செக் குடியரசு; தெற்கே ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து; மேற்கே பிரான்ஸ், லக்சம்பேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியன எல்லைகளாக உள்ளன. ஜெர்மனியின் பரப்பளவு 357,021 கிமீ
82 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகூடிய மக்கள்தொகை கொண்ட உறுப்பு நாடாகவும், மூன்றாவது அதிகம் புலம் பெயர்ந்த மக்களைக் கொண்டதாகவும் திகழ்கிறது[2].
ஜெர்மனி கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி என இரண்டு பகுதிகளாக 1949 ஆம் ஆண்டு முதல் 3.அக்டோபர்,1990 வரை இருந்தது. கிழக்கு-ஜெர்மனிக்கு கிழக்கு-பெர்லின் தலைநகரமாகவும் மேற்கு-ஜெர்மனிக்கு பான்(Bonn) தலைநகரமாகவும் இருந்தன. மேற்கு-பெர்லினை கிழக்கு-பெர்லின் மற்றும் கிழக்கு-ஜெர்மனியில் இருந்து பிரிக்க 1961 இல் பெர்லின் சுவர் கட்டப்பட்டது. 1989 இல் அச்சுவர் உடைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஜெர்மனிக்கு பெர்லின் தலைநகரம் ஆனது.
ஜெர்மனி இப்போது 16 மாநிலங்களை (Länder) கொண்ட ஒரு கூட்டாட்சி நாடாளுமன்றக் குடியரசாகும். இதன் தலைநகரம் பெர்லின். இதுவே இந்நாட்டின் பெரிய நகரமும் ஆகும்.
ஜெர்மானியா என அறியப்பட்ட பிரதேசத்தில் கி.பி. 100க்கு முன்னரே ஜெர்மானிக் மக்கள் குடியேறியமைக்கு ஆதாரங்கள் உள்ளன. குடிப்பெயர்வுக் காலப்பகுதியில், ஜெர்மானிக் குழுக்கள் மேலும் தென்பகுதிக்குப் பரவியதோடு ஐரோப்பாவெங்கும் வெற்றிகரமான ராச்சியங்களை ஏற்படுத்தினர். 10ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஜெர்மனியப் பகுதிகள் புனித உரோமப் பேரரசின் மையப்பகுதிகளாக இருந்தன.[3] 16ம் நூற்றாண்டில் வடக்கு ஜெர்மன் பகுதிகள் புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தின் மத்திய நிலையமாக விளங்கியது. எனினும், தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் ரோமன் கத்தோலிக்கப் பகுதிகளாகவே இருந்தன. இதன் காரணமாக முப்பதாண்டுப் போர் ஏற்பட்டதோடு, கத்தோலிக்க்- புரட்டஸ்தாந்து பிரிவினையின் ஆரம்பமாகவும் அமைந்தது. அன்றிலிருந்து இன்றுவரை, ஜெர்மானிய சமுதாயத்தின் பண்பைத் தீர்மானிப்பதாகவும் இது இருந்து வருகிறது.[4] நெப்போலியப் போர்களின் போது, ஜெர்மானியப் பகுதிகளில் நாட்டுப் பற்று எழுச்சிபெற்றது. இதன் மூலம்,1871இல், புருசியாவைத் தலைமையாகக் கொண்டு, பெரும்பாலான ஜெர்மானியப் பகுதிகள் ஜெர்மன் பேரரசாக எழுச்சி பெற்றன
ஜெர்மனி
- 19 ஆம் நூற்றாண்டின் முடிவில் ஐரோப்பியக் கண்டத்திற்குள் இருந்த நாடுகளில் தொழிற்துறையில் வலிமையான சக்தியாக ஜெர்மனி நாடு உருவாகியது.
- தொழிற்புரட்சிகள் முதலில் இங்கிலாந்தில் தோன்றின.
- ஆனால் ஜெர்மனி தொழிற்புரட்சியில் இங்கிலாந்து நாட்டினை மிஞ்சி அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு போட்டியாளராக வளர்ந்தது.
- பல துறைகளில் ஜெர்மன் நிறுவனம் பிற நாடுகளை விட மேம்பட்டதாக விளங்கியது.
- 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மனி மிகப் பெரிய அளவில் தொழில் மயமான நாடாக உயர்ந்தது.
- பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் சோவியத் நாடு ஆகியவை உலகத்தின் பெரும் நிலப்பரப்புகளை தங்களின் காலனிகளாகக் கொண்டிருந்தன.
- ஆனால் ஜெர்மனி எந்த காலனிகளை கொண்டு இருக்கவில்லை.