அட்லாண்டிக் பட்டயத்தின் சிறப்புக் கூறுகளைப்
பட்டியலிடுக.
Answers
Explanation:
அட்லாண்டிக் பட்டயம்
உலக அமைதியினை காக்க அமெரிக்க குடியசுத் தலைவர் ரூஸ்வெல்டும், இங்கிலாந்தின் பிரதம அமைச்சர் சர்ச்சிலும் இணைந்து வழங்கிய அறிக்கையே அட்லாண்டிக் பட்டயம் ஆகும்.
சிறப்புக் கூறுகள்
ஒரு நாட்டில் உள்ள பிரதேசங்களில் மக்களின் ஒப்புதல் இல்லாமல் சீரமைப்பு ஏற்படுத்த கூடாது.
குடிமக்கள் தான் ஒரு நாட்டிற்கான அரசினை தேர்ந்தெடுக்க முழு உரிமையினை உடையவர்கள் ஆவர்.
உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் வணிகத் தொடர்பினை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும்.
பிற பகுதியிலிருந்து கிடைக்கும் மூலப் பொருட்களை பெறுதலில் சமத்துவத்தினை ஏற்படுத்துதல் வேண்டும்.
தடையில்லாமல் கடல் கடந்து செல்ல சுதந்திரத்தினை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நாடுகளை ஆயுதக்குறைப்பிற்கு உட்படுத்துதல் முதலியன ஆகும்.