அரசமைப்பில் திருத்தச்சட்ட ஏற்பாடு என்றால் என்ன?
Answers
Answered by
0
Answer:
post the question in english plzz....
Answered by
0
இந்திய அரசமைப்பு, மாறும் காலச்சூழல் மற்றும் தேவைகளுக்கு பொருத்தமான வகையில் இருக்கும்படியும், அதேசமயம் அடிப்படை கட்டமைப்பு மாறாவண்ணம் இருக்குமாறும் ஒரு தனித்துவமான அமைப்பை கொண்டுள்ளது.
விளக்கம்:
உறுப்பு 368, அரசமைப்புச் திருத்தச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதைப் பற்றி குறிப்பிடுகிறது. அந்த திருத்தச்சட்டத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளநாடாளுமன்றத்திற்கு உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது. அரசமைப்பு திருத்தச்சட்டத்தைமேற்கொள்ளும் நடைமுறைகள் பின்வருமாறு:
- அரசமைப்பிலுள்ள சில விதிகளில் திருத்தங்களை செய்ய, சிலவற்றை சேர்க்க, மாற்றியமைக்க அல்லது நீக்க, நாடாளுமன்றம் இந்த பிரிவில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளின்படி செயல்படலாம்.
- அரசமைப்பில் ஏற்படுத்தப்படும் திருத்தம், நாடாளுமன்றத்தின் ஈரவைகளிலும் ஒரு முன்வரைவாக சமர்ப்பிக்கப்பட்டு, தனித்தனியாக ஒவ்வொரு அவையிலும், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு மேல் ஆதரவும், வாக்கு செலுத்தியவர்களின் எண்ணிக்கை, இரண்டு பங்குக்கு குறையாத பெரும்பான்மை ஆதரவைப்பெற்று நிறைவேற்றப்பட்டால், அது பின்னர் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.
- அந்த முன்வரைவு ஒவ்வொரு அவையிலும் ஒரு சிறப்பு பெரும்பான்மை பெற்று நிறைவேற்றப்பட வேண்டும். அதாவது அந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான பெரும்பான்மை எண்ணிக்கை கொண்டிருக்க வேண்டும். மற்றும் வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும். ஒவ்வொரு அவையும் தனித்தனியாக அந்த முன்வரைவை நிறைவேற்ற வேண்டும். ஒருவேளை திருத்த நடவடிக்கைகள் காரணமாக ஈரவைகளுக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றுமென்றால் ஈரவைகளையும் இணைந்து நடத்துவதற்கான வழிமுறைகள் எதுவுமில்லை. ஒருவேளை முன்வரைவில் அரசமைப்பின் கூட்டாட்சி வரைமுறைகள் குறித்து ஏதேனும் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருந்தால், மொத்த மாநிலங்களின் எண்ணிக்கையில், பாதி மாநிலங்களின் தனிப்பெரும்பான்மை ஏற்படுத்தி அதாவது அத்தகைய சட்டமன்றங்களில் வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களின் பெரும்பான்மை தேவை.
- நாடாளுமன்றத்தின் ஈரவைகளிலும் முறையாக நிறைவேற்றப்பட்டு மற்றும் தேவைப்பட்ட இடங்களில் அந்தந்த மாநிலச் சட்டமன்றங்களால் உறுதிசெய்யப்பட்ட பிறகு அந்த முன்வரைவு ஒப்புதலுக்காக குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது அல்லது மறு பரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்றத்துக்கு திருப்பி அனுப்புவது போன்றவற்றை குடியரசுத்தலைவர் செய்ய இயலாது. குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு அது சட்டமாகிறது. (அதாவது ஒரு அரசமைப்பு திருத்தச்சட்டம்) அரசமைப்பு விதிமுறைகளின் அடிப்படையில்அந்த சட்டம் திருத்தமடைகிறது.
Similar questions