சட்டமன்றத்தின் அதிகாரங்கள் யாவை?
Answers
Answered by
0
மாநில சட்டமன்றம், மாநிலப்பட்டியல் மற்றும் பொதுப் பட்டியலில் உள்ள துறைகளுக்கு தேவையான சட்டங்களைஇயற்றுகிறது.
விளக்கம்:
- பாராளுமன்றத்தில் ஒரு மசோதா சட்டமாவதற்கு மேற்கொள்ளப்படும் முறையே மாநில சட்டமன்றங்களிலும் கையாளப்படுகிறது.
- மாநிலத்தின் நிதிச் சார்ந்த செயல்களை சட்டப்பேரவை கட்டுப்படுத்துகிறது. சட்டமன்றத்தின் அனுமதியின்றி புதிய வரிகளை விதிக்கமுடியாது. சட்ட மேலவையை விட சட்ட பேரவை அதிகாரமிக்கது. நிதி ஒதுக்கீடுச் சட்ட வரைவு சட்டமன்றத்தில் (கீழவை) மட்டுமே அறிமுகப்படுத்தப்படுகிறது. நிதி மசோதா கொண்டுவரும் போது ஐந்து நிலைகளாக மூன்று முறை படிக்கப்பட்டபின், ஆளுநரின் அனுமதியுடன் இது சட்டமாகும்.
- சட்டமன்ற அவையின் நடவடிக்கைகளுக்கு அமைச்சர்கள் பொறுப்பாவார்கள்.
- பொறுப்பில் உள்ள அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிர் அளிக்க வேண்டும். நம்பிக்கையில்லாத தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டால் ,அமைச்சரவை கலைக்கப்படும். நிருவாகம் சட்டமன்ற நிகழ்வுக்குக் கடமைப்பட்டுள்ளது.
Similar questions