குப்பை உணவுகளை உண்பதாலும், மென்
பானங்களைப் பருகுவதாலும் உடற்பருமன்
போன்ற உடல்நலப் பிரச்சினைகள்
ஏற்பட்ட போதிலும், குழந்தைகள் அதனை
விரும்புகின்றனர். இதனைத் தவிர்ப்பதற்கு
நீங்கள் தரும் ஆலோசனைகளைக் கூறுக
Answers
Answered by
0
குப்பை உணவுகளை தவிர்ப்பதற்கான ஆலோசனைகள்:
- அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவினை உங்கள் சமையல் அறை மற்றும் வீட்டில் இருந்து நீக்கவும் .
- சீவல்கள், வாயு நிரப்பப்பட்ட குளிர்பானங்கள், மிட்டாய் பதப்படுத்தப்பட்ட பீட்சா, இனிப்பு மாவு பண்டங்கள் போன்ற குப்பை உணவுகளை தவிர்த்தல்.
- குழந்தைகளுக்கு பிடித்தமான சத்து நிறைந்த தின்பண்டங்களை சமையலறையில் வைத்தல்.
- கொழுப்பு சத்து குறைவாக உள்ள கொட்டை வகைகள், உலர்ந்த பழங்கள், பேரீச்சம்பழம் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுத்தல்.
- திடீரென ஏற்படும் பசிக்கு, குளிர்பானங்கள் பயன்படுத்துவதற்கு பதிலாக தண்ணீர் பாட்டில்கள் வீட்டில் தயாரித்த எலுமிச்சை சாறு, சர்க்கரை இல்லாத பழச்சாறு போன்றவற்றை பயன்படுத்துதல்.
- பெரும்பாலும் ஆவியில் வேக வைத்த அல்லது குறைவான எண்ணெயில் சமைத்த உணவினை பயன்படுத்துதல்.
- அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்தல் ஆகியவற்றின் மூலம் குப்பை உணவுகளை தவிர்க்கலாம் .
Similar questions