தேசிய வருவாயைக் கணக்கிடும் முறைகளை விளக்குக.
Answers
Answered by
7
Answer:
its the work of income tax.......
லஞ்சம் கொடுக்காமல் வருவாய் கட்டவேண்டும்
Answered by
16
தேசிய வருவாயைக் கணக்கிடும் முறைகள்
- ஒரு நாட்டின் தேசிய வருவாய் ஆனது உற்பத்தி, வருமானம் மற்றும் செலவு ஆகிய மூன்று முறைகளை பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.
உற்பத்தி
- ஒரு நாட்டின் உற்பத்தியினை கணக்கிடுவதே உற்பத்தி முறை ஆகும்.
- இது சரக்கு முறை என்று அழைக்கப்படுகிறது.
- தேசிய உற்பத்தி என்பது விவசாயம், தொழில், வணிகம் முதலிய துறைகளில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஏற்படும் மொத்த உற்பத்தி ஆகும்.
- ஒரு துறையின் உள்ளீடாக மற்றொரு துறையின் வெளியீடு இருக்க வாய்ப்பு இருப்பதால் ஒரே பொருள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை கணக்கில் வர வாய்ப்பு உள்ளது.
- இதற்கு இருமுறை கணக்கிடல் என்று பெயர்.
- இறுதி பொருட்களின் மதிப்பு அல்லது ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்ட மதிப்புக் கூட்டலை கணக்கில் எடுத்துக் கொண்டு மேற்கண்ட பிரச்சனையை தவிர்க்கலாம்.
வருமானம்
- தேசிய வருமானத்தினை உற்பத்தி நிலைகளில் உற்பத்திக் காரணிகள் பெற்ற அனைத்து வித ஊதியங்களையும் கூட்டி கணக்கிடலாம்.
- வருமான முறை காரணிகள் சம்பாதிக்கும் முறை என்று அழைக்கப்படுகிறது.
செலவு முறை
- ஒரு ஆண்டில் சமுதாயத்தில் உள்ளவர்களால் மேற்கொள்ளப்படும் மொத்த செலவுகள் அனைத்தினையும் கூட்டி தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது.
- செலவு முறையில் தேசிய வருவாய் ஆனது தனிநபர் சுய நுகர்வு செலவுகள், நிகர உள்நாட்டு முதலீடு, அரசின் கொள்முதல் செலவு, முதலீட்டு பொருள் வாங்கும் செலவு மற்றும் நிகர ஏற்றுமதி முதலிய செலவுகளை கூட்டி கணக்கிடப்படுகிறது.
- மொத்த செலவிற்கான சமன்பாடு GNP = C + I + G + (X-M) ஆகும்.
- இதில் C – தனியார் நுகர்வுச் செலவு, I – தனியார் முதலீட்டு செலவு, G – அரசின் கொள்முதல் செலவு, X – M நிகர ஏற்றுமதி ஆகும்.
Similar questions