பொருளாதார ஆய்வில், சமூகக் கணக்கிடுதலின் அவசியத்தை விவாதி.
Answers
Answered by
0
சமூக கணக்கிடுதல் மற்றும் துறை
- துறை என்பது தனிநபர்கள் உள்ளடக்கிய ஒரு குழு அல்லது பல நிறுவனங்கள் சேர்ந்த ஒரு குழு ஆகியவைகளுக்கு இடையே நிகழும் பொருளாதார பரிமாற்றம் ஆகும்.
நிறுவனங்கள்
- உற்பத்திக் காரணிகளை கொண்டு பண்டங்கள் மற்றும் பணிகளை நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன.
குடும்பங்கள்
- தங்கள் உழைப்பினை தந்து கூலியினை பெற்று, அதன் மூலம் பண்டங்கள் மற்றும் பணிகளை குடும்பங்கள் பெறுகின்றன.
அரசு
- அரசு கிராமம், வட்டம், மாவட்டம், மாநிலம் மற்றும் மத்திய அரசு உள்ளிட்ட பல நிலைகளில் உள்ளது.
- ஒன்று சேர்க்கப்பட்ட நபர்களே அரசு என்பது எடி மற்றும் பீகாக்கின் கூற்று ஆகும்.
- அரசு வரி, தண்டணை, கட்டணம் மற்றும் கடன் மூலமாக நிதியினை பெற்று பணி மற்றும் பண்டங்களை பெறுகிறது.
வெளி நாட்டு வாணிபம்
- வெளிநாட்டுத்துறைகள் என்பது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலம் கிடைக்கும் வருமானம், வெளிநாட்டு கடன்கள், வெளிநாட்டு மூலதன வருமானம் மற்றும் செலுத்துதல்கள் முதலியன ஆகும்.
மூலதனத்துறை
- வங்கிகள், காப்பீட்டு நிறுவனம், நிதி நிறுவனங்கள் முதலியனவற்றின் பண பரிமாற்றங்கள் மூலதனத்துறையில் அடங்கும்.
Similar questions