அமைப்புசார் வேலையின்மையின்
இயல்பு_______
அ. இயங்கா சமுதாயம்
ஆ. சமதர்ம சமுதாயம்
இ. இயங்கும் சமுதாயம்
ஈ. கலப்புப் பொருளாதாரம்
Answers
Answered by
0
இயங்கும் சமுதாயம்
வேலையின்மை
- வேலையின்மை என்பது நிலவுகின்ற கூலி விகிதத்தில் நல்ல உடல் நலம் உள்ள தனி நபர்கள், வேலை செய்யத் தயாராக உள்ள அனைவருக்கும் தகுந்த வேலை இல்லாத சூழ்நிலை ஆகும்.
அமைப்புசார் வேலையின்மை
- அமைப்புசார் வேலையின்மை ஆனது சமூக அமைப்பில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படுவதால் உருவாகிறது.
- அமைப்புசார் வேலையின்மையின் இயல்பு இயங்கும் சமுதாயம் ஆகும்.
- அமைப்புசார் வேலையின்மைக்கு காரணமாக அமைபவை ஒரு பொருளுக்கான தேவை குறைதல் அல்லது பிற பொருட்களின் தேவை அதிகரித்தல், இடு பொருட்கள் இன்மை, முதலீடு பற்றாக்குறை முதலியன ஆகும்.
- (எ.கா) கைபேசியின் தேவை அதிகரித்ததால், கேமிரா மற்றும் டேப் ரெக்கார்டர்களின் தேவை குறைந்து விட்டது.
- மூலதன பற்றாக்குறையின் காரணமாக இந்தியாவில் மக்கள் வேலையின்றி இருக்கின்றனர்.
Similar questions