ரெப்போ விகிதம் என்பதன் பொருள்
அ) வணிக வங்கிகள் ரிசர்வ்
வங்கிகளுக்கு அளிக்கும்
கடனுக்கான வட்டி விகிதம்
ஆ) ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு
அளிக்கும் கடனுக்கான வட்டி
விகிதம்
இ) அந்நிய செலாவணி விகிதம்
ஈ) நாட்டின் வளா;ச்சி விகிதம்
Answers
பொதுவாக 'வங்கி' என்பது வணிக வங்கிகளையே குறிக்கும். 'வங்கி' என்ற சொல் ஜெர்மானிய மொழியான 'பாங்க்' (Bank) லிருந்து உருவாகியது. 'வங்கி' என்பதற்கு கூட்டுப் பங்கு நிதி (Joint Stock Fund) அல்லது குவியல் (Heap) எனப்படும். பிரெஞ்சு மொழிச் சொல்லான “பாங்கே' (Bangue) மற்றும் இத்தாலிய மொழிச் சொல்லான “பாங்கா' (Banco) ஆகியவற்றிலிருந்து தோன்றியிருக்கலாம். இத்தாலிய மொழியில் 'பாங்கா' எனப்படுவது இருக்கையைக் குறிக்கும். அதிலிருந்து பணம் மாற்றுபவர் அல்லது இடைத்தரகர்கள் பணத்தின் ஒருவகையை மற்றொரு வகையாக மாற்றித் தருவதன் மூலம் வங்கி வாணிபம் செய்தனர். இவ்வாறு, பழங்கால வங்கியியல் முறை பணமாற்று வாணிபத்துடன் தொடர்பு கொண்டிருந்தது.
1157ல், முதல் பொது வங்கி நிறுவனமான 'வெனிஸ் வங்கி’ தோற்றுவிக்கப்பட்டது. ‘பார்சிலோனா வங்கி' மற்றும் ஜெனோவா வங்கி முறையே 1401 மற்றும் 1407ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டன. இவையே நவீன வணிக வங்கிகளின் முன்னோடியாகும். 1609ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஆம்ஸ்டர்டாம் வங்கி மற்றும் 1690ல் மாம்பர்க் (Mamburg Bank) வங்கிகளுக்குப் பின்னர் பரிவர்தனை வங்கி முறை வளர்ச்சியுற்றது.
இங்கிலாந்து நாட்டின் நவீன வங்கிமுறையை தோற்றுவித்ததன் பெருமை இத்தாலியைச் சேர்ந்த இலம்பார்டி யூதர்களையே சாரும். இவர்கள் இத்தாலியிலிருந்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தனர். இலம்பார்டி யூதர்கள் இங்கிலாந்தில் பணத்தை வட்டிக்குக் கொடுக்கும் வாணிபம் நடத்தினர். 1694ஆம் ஆண்டு 'இங்கிலாந்து வங்கி தொடங்கப்பெற்றது. 1833ல் கூட்டுப் பங்கு வணிக வங்கிமுறை (Joint Stock Commercial Banking) தொடங்கப் பெற்றது. நவீன வங்கிமுறை 19-ஆம் நூற்றாண்டிலேயே வளர்ச்சியுற்றது எனலாம். இந்தியாவில் வங்காளத்தில் 1806ஆம் ஆண்டு வங்காள வங்கி' முதன்முதல் தோற்றுவிக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம்
ரெப்போ விகிதம் (RR)
- ரெப்போ விகிதம் என்பது மைய வங்கி (இந்திய ரிசர்வ் வங்கி) ஆனது வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும் போது விதிக்கின்ற வட்டி விகிதம் என அழைக்கப்படுகிறது.
- அதவாது நிதிப் பற்றாக்குறை ஏற்படும் போது வணிக வங்கிகள் பத்திரங்களை ஈடாக வைத்து மைய வங்கியிடம் (இந்திய ரிசர்வ் வங்கி) இருந்து கடன்களை பெறும்.
- அந்த சமயத்தில் கடன் தொகையின் மேல் விதிக்கப்படும் வட்டி விகிதமே ரெப்பொ விகிதம் ஆகும்.
- மைய வங்கி ஆனது பண வாட்ட சூழ்நிலையில் பண வீக்கத்தினை கட்டுப்படுத்த ரெப்போ விகிதத்தை அதிகரித்து, கடன் வாங்குவதற்கான செலவினை அதிகரித்து, கடன் வாங்குவதை குறைக்கிறது.