வங்கிகளின் வங்கி என அழைக்கப்படுவது
அ) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
ஆ) நபார்டு
இ) ICICI
ஈ) இந்திய ரிசர்வ் வங்கி
Answers
Answered by
2
Explanation:
பொதுவாக 'வங்கி' என்பது வணிக வங்கிகளையே குறிக்கும். 'வங்கி' என்ற சொல் ஜெர்மானிய மொழியான 'பாங்க்' (Bank) லிருந்து உருவாகியது. 'வங்கி' என்பதற்கு கூட்டுப் பங்கு நிதி (Joint Stock Fund) அல்லது குவியல் (Heap) எனப்படும். பிரெஞ்சு மொழிச் சொல்லான “பாங்கே' (Bangue) மற்றும் இத்தாலிய மொழிச் சொல்லான “பாங்கா' (Banco) ஆகியவற்றிலிருந்து தோன்றியிருக்கலாம். இத்தாலிய மொழியில் 'பாங்கா' எனப்படுவது இருக்கையைக் குறிக்கும். அதிலிருந்து பணம் மாற்றுபவர் அல்லது இடைத்தரகர்கள் பணத்தின் ஒருவகையை மற்றொரு வகையாக மாற்றித் தருவதன் மூலம் வங்கி வாணிபம் செய்தனர். இவ்வாறு, பழங்கால வங்கியியல் முறை பணமாற்று வாணிபத்துடன் தொடர்பு கொண்டிருந்தது.
Answered by
0
இந்திய ரிசர்வ் வங்கி
- ஒவ்வொரு நாட்டின் மைய வங்கி அல்லது பணவியல் அதிகார அமைப்பே அந்த நாட்டின் தலைமை வங்கி ஆகும்.
- நாட்டில் உள்ள அனைத்து வணிக வங்கிகளை மேற்பார்வையிடுவதும் மைய வங்கியின் முக்கிய பணி ஆகும்.
- ஒரு நாட்டின் பணவியல் அதிகார அமைப்பு என்பது அந்த நாட்டு அரசின் பணம், பண அளிப்பு மற்றும் வட்டி விகிதம் முதலியனவற்றினை மேலாண்மை செய்யும் ஒரு நிறுவனம் ஆகும்.
- நம் இந்திய நாட்டின் மைய வங்கி அல்லது பணவியல் அதிகார அமைப்பு இந்திய ரிசர்வ் வங்கி என அழைக்கப்படுகிறது.
- இந்திய ரிசர்வ் வங்கி ஆனது நம் நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளுக்கு வேண்டிய கடன்களை அளிக்கின்றது.
- அந்த வங்கிகளில் உள்ள வைப்புகளை பெறுகிறது.
- மாற்றுச் சீட்டுக்களை மறு தள்ளுபடி செய்யும் பணியில் ஈடுபடுகிறது.
- இதன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி ஆனது வங்கிகளின் வங்கி என அழைக்கப்படுகிறது.
Similar questions