விவசாய கடன் வழங்கும் துறையின் பணிகளை குறிப்பிடுக.
Answers
Answered by
1
விவசாய கடன் வழங்கும் துறையின் பணிகள்
- விவசாய கடன் வழங்கும் துறை ஆனது விவசாய கடன் தொடர்பான அனைத்து வினாக்களுக்கும், சரியான விடையினைக் காண நிபுணத்துவம் பெற்ற அலுவலரை நியமித்து ஆய்வு செய்கிறது.
- விவசாய கடன் வழங்கும் துறை ஆனது நிபுணத்துவம் வாய்ந்த ஆலோசனைகளை மைய அரசு, மாநில அரசு, மாநில கூட்டுறவு வங்கிகள், மற்றும் இதர வங்கிகளின் பொருளாதார நடவடிக்கைகளில் வழங்கி வருகிறது.
- மேலும் இவை விவசாயக் கடன்களை ஊரகத் துறைக்கு தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
- மேலும் விவசாயக் கடன்களை ஒருங்கிணைக்கும் பணியிலும் ஈடுபடுகின்றன.
- மாநில கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் துவக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவை மூலம் இந்திய ரிசர்வ் வங்கி விவசாயிகளுக்கு கடன் வழங்கி வருகிறது.
Similar questions