கீழ்கண்டவைகளில் எவை வெளிநாட்டு
நேரடி மூலதனத்திற்கான உதாரணமாக
கூற முடியாது?
அ. வெளிநாட்டில் தன்னூர்தி ஆலை
அமைத்தல்
ஆ. வெ ளி ந ா ட் டி ல்
செயல்பட்டுக்கொண்டிருக்கிற இரும்பு
உருக்கு ஆலையை வாங்குதல்
இ. வெளிநாட்டு துணி நிறுவனம்
வெளியிட்ட பங்கு அல்லது கடன்
பத்திரத்தை வாங்குவது
ஈ. முழு தனி உரிமையுடன் ஒரு புதிய
நிறுவத்தை வெளிநாட்டில்
தொடங்குவது
Answers
Answered by
0
வெளிநாட்டு துணி நிறுவனம் வெளியிட்ட பங்கு அல்லது கடன் பத்திரத்தை வாங்குவது
அன்னிய நேரடி முதலீடு
- அன்னிய நேரடி முதலீடு ஆனது பன்னாட்டு பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- பன்னாட்டு வாணிகம் மற்றும் வெளி நாட்டு நேரடி மூலதனம் ஆகிய இரண்டும் மிகவும் நெருக்கம் உடையவை.
- பன்னாட்டு வாணிகத்தின் வளர்ச்சிக்கு இயற்கை வளங்கள் மற்றும் தோட்டப்பயிர் துறைகளில் வேலை செய்யும் வெளி நாட்டினர் உதவுகின்றனர்.
- வெளி நாட்டு நேரடி முதலீடு ஆனது வேலை வாய்ப்பை உருவாக்குதல், அந்நிய செலாவணி பற்றாக்குறையை நீக்குதல் மற்றும் பொருளாதார வளர்ச்சி வேகத்தை அதிகரித்தல் முதலிய காரணங்களால் பலராலும் விரும்பப்படுகிறது.
உதாரணம்
- வெளிநாட்டில் தன்னூர்தி ஆலை அமைத்தல், வெளிநாட்டில் செயல்பட்டு கொண்டிருக்கிற இரும்பு உருக்கு ஆலையை வாங்குதல் மற்றும் முழு தனி உரிமையுடன் ஒரு புதிய நிறுவத்தை வெளிநாட்டில் தொடங்குவது முதலியன ஆகும்.
Similar questions