வரவு செலவுத் திட்டத்தில் உள்ள பலவகை பற்றாக்குறைகளை விளக்குக.
Answers
Answered by
0
Answer:
doeoieuisokwjsnnsndkdnndnjjhjdjs
Answered by
0
வரவு செலவுத் திட்டத்தில் உள்ள பற்றாக்குறைகள்
வருவாய் பற்றாக்குறை
- வருவாய் பற்றாக்குறை என்பது அரசின் வருவாய் செலவினம், வருவாய் வரவைவிட அதிகமாக இருத்தல் ஆகும்.
- அரசின் அன்றாட பணிகளை நடத்துவதற்கு தேவையானதைவிட குறைவாக உள்ளதைக் காட்டுவதாக வருவாய் பற்றாக்குறை உள்ளது.
- வருவாய் பற்றாக்குறை (RD) = மொத்த வருவாய் செலவினம் (RE) – மொத்த வருவாய் வரவுகள் (RR)
வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை
- வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை என்பது வருவாய் மற்றும் மூலதனக் கணக்குகளின் மொத்த வரவு மற்றும் செலவு ஆகிய இரண்டிற்குமான இடைவெளி ஆகும்.
- வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை = மொத்தச் செலவு – மொத்த வரவு
நிதிப் பற்றாக்குறை
- வரவு செலவு பற்றாக்குறையைவிட நிதிப் பற்றாக்குறை அதிகமானதாக உள்ளது.
- நிதிப்பற்றாக்குறை = வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை – அரசின் அங்காடிக் கடன்களும் ஏனைய பொறுப்புகளும்.
முதன்மைப் பற்றாக்குறை
- நிதி பற்றாக்குறையில் இருந்து வட்டி செலுத்தலை கழித்த பின் உள்ள பற்றாக்குறைக்கு முதன்மைப் பற்றாக்குறை என்று பெயர்.
- முதன்மைப் பற்றாக்குறை (PD) = நிதிப்பற்றாக்குறை (FD) - வட்டி செலுத்துதல் (IP) ஆகும்.
Similar questions