மறைமுக வரிகளின் நன்மைகள் யாவை?
Answers
Answered by
1
மறைமுக வரிகளின் நன்மைகள்
பரந்து காணப்படுதல்
- ஏழை, பணக்காரர்கள் என அனைத்து நுகர்வோர்களும் மறைமுக வரிகளை செலுத்த வேண்டும்.
- இதன் காரணமாகவே நேர்முக வரிகளை விட மறைமுக வரிகள் அதிக நபர்களை கொண்டு உள்ளது.
சமத்துவம்
- மறைமுக வரியில் சமத்துவ விதியின் அடிப்படையில் பணக்காரர்கள் பயன்படுத்தும் ஆடம்பரப் பொருட்கள் மீது அதிக வரி சுமத்தப்படுகிறது.
சிக்கனத் தன்மை
- உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மறைமுக வரியினை வசூலித்து அரசுக்கு செலுத்துவதால் வசூலிப்பதற்கான செலவு குறைகிறது.
- அதே போல வணிகர்களும் மதிப்புமிக்க வரி வசூலிப்பவர்களாக உள்ளனர்.
உடலுக்கு தீங்கான பொருட்களின் நுகர்வை குறைக்கிறது
- உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய புகையிலை, மது போன்ற பொருட்கள் மீது அரசு மறைமுக வரியினை விதிக்கிறது.
- இது பாவ வரி என அழைக்கப்படுகிறது.
Answered by
2
The advantages of maraimuga varigal is that everybody should pay tax.It doesn't mean of rich or poor people in the world
❤
Similar questions