பொருளாதார முன்னேற்றத்தின் குறியீடுகளை குறிப்பிடுக
Answers
Answered by
1
பொருளாதார முன்னேற்றத்தின் குறியீடுகள்
நாட்டின் மொத்த உற்பத்தி (GNP)
- மொத்த நாட்டு உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு நாட்டின் புவி எல்லைக்குள் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளின் சந்தை மதிப்போ அந்த நாட்டு மக்கள் வெளிநாடுகளில் ஈட்டிய வருமானம் மற்றும் வெளிநாட்டின் சம்பாதித்து அவர்கள் நாட்டுக்கு அனுப்பிய வருமானம் ஆகிய இரண்டிற்குமான வேறுபாடுத்தொகையின் கூட்டல் மதிப்பு ஆகும்.
தலாவீத மொத்த நாட்டு உற்பத்தி
- தலாவீத மொத்த நாட்டு உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஓரு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பினை, அந்த ஆண்டின் மக்கள் தொகையினால் வகுக்கக் கிடைக்கும் ஈவுத் தொகை ஆகும்.
நலன்
- பொருளாதார முன்னேற்றத்தை மக்களின் சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிட்ட அளவு முன்னேறுவதை சார்ந்து நலன் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் வரையறுக்கலாம்.
சமூகக் குறியீடுகள்
- சமூகக் குறியீடுகள் என்பவை மக்களின் அடிப்படை மற்றும் கூட்டுத் தேவையை நிவர்த்தி செய்வது ஆகும்.
Similar questions