Economy, asked by gourangadas6133, 1 year ago

பொருளாதார முன்னேற்றம் - வரையறு

Answers

Answered by steffiaspinno
2

பொருளாதார முன்னேற்றம்  

  • பொருளாதார முன்னேற்றம் எ‌ன்பது வளரும் நாடுகளின் பிரச்சனைகளைக் கையாளுவதாக உ‌ள்ளது.
  • பொருளாதார மு‌ன்னே‌ற்ற‌த்‌தி‌ல் தொடர்ச்சியற்ற தன்னிச்சையான மாற்றங்கள் ஏ‌ற்ப‌டு‌‌கி‌ன்றன.
  • பொருளாதார மு‌ன்னே‌ற்ற‌ம் ஆனது உ‌ற்ப‌த்‌தி அ‌திக‌ரி‌ப்பு, உ‌ற்ப‌த்‌தி பொரு‌ட்க‌ளி‌ன் வகைக‌ள், வள‌ர்‌ச்‌சி ம‌ற்று‌ம் க‌ட்டமை‌ப்‌பி‌ல் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌ங்க‌ள் முத‌லியனவ‌ற்‌றினை கு‌றி‌ப்‌பிடுவதாக உ‌ள்ளது.
  • பொருளாதார முன்னேற்றம் எண்ணிக்கை மற்றும் தர அடிப்படை‌யி‌ல் அமை‌ந்தது ஆகு‌ம்.
  • பொருளாதார முன்னேற்றம் ஆனது ‌வி‌ரிவான பொரு‌‌ள் உடையதாக உ‌ள்ளது.
  • மை‌க்கே‌ல் ‌பி.டொடாரோ‌வி‌ன் கரு‌த்து‌ப்படி, பொருளாதார மு‌ன்னே‌ற்றமாக கருத‌ப்பட வே‌‌ண்டியவை சமூக அமைப்பு, பொது மக்களின் மனநிலை மற்றும் நாட்டின் நிறுவன அமைப்புகள் முத‌லியனவ‌ற்‌றில் தோ‌ன்று‌ம் பெரிய மாற்றங்கள் மற்றும் விரைவான வளர்ச்சி, வருவாய் ஏற்றத்தாழ்வினை குறைத்தல் மற்றும் வறுமை ஒழிப்பு முத‌லியன ஆகு‌ம்.  
Similar questions