பல்வேறு வகையானத் திட்டமிடல் வகைகளை விவரி
Answers
Answered by
1
திட்டமிடல் வகைகள்
மக்களாட்சி மற்றும் சர்வாதிகார திட்டமிடல்
- மக்களாட்சி திட்டமிடல் என்பது திட்டங்களை தயாரித்தல் மற்றும் செயல்படுத்துதல் என அனைத்திலும் மக்கள் பங்கேற்கும் திட்டமிடல் ஆகும்.
- சர்வாதிகார திட்டமிடல் என்பது மையத் திட்டக்குழு ஒரு திட்டத்தினை கையில் எடுத்துகொண்டு நாட்டின் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் திட்டமிடல் ஆகும்.
மையப்படுத்தப்பட்ட மற்றும் பரவாலக்கப்பட்ட திட்டமிடல்
- மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் மேலிருந்து திட்டமிடல் எனவும், பரவாலக்கப்பட்ட திட்டமிடல் கீழிருந்து திட்டமிடல் எனவும் அழைக்கப்படுகிறது.
வழிகாட்டும் மற்றும் தூண்டும் திட்டமிடல்
- வழிகாட்டும் திட்டமிடல் என்பது திட்டக்குழுவானது வழிகாட்டுதலை வழங்கி, திட்டம் தயாரித்து ஆணையிடுதல் மூலமாக திட்டத்தினை செயல்படுவது ஆகும்.
- தூண்டும் திட்டமிடல் என்பது திட்டக்குழு தயாரித்த திட்டத்தினை ஊக்கமளித்து மக்களால் நடவடிக்கைகளை செய்ய வைப்பது ஆகும்.
செயல்பாட்டுத் திட்டமிடல் மற்றும் அமைப்பு முறை திட்டமிடல்
- செயல்பாட்டுத் திட்டமிடல் என்பது ஒரு நாடு பெற்று உள்ள பொருளாதார அமைப்பு மற்றும் சமூக அமைப்பு முறைகளை மாற்றாமல் பொருளாதார சீர்கேடுகளை நீக்குவதற்கு வழிகாட்டுதல்கள் மட்டும் செய்யும் திட்டமிடல் ஆகும்.
- அமைப்பு முறை திட்டமிடல் என்பது பொருளாதார அமைப்பு முறையில் பொருத்தமான மாற்றங்களைச் செய்து இலக்குகளை அடையும் திட்டமிடல் என அழைக்கப்படுகிறது.
Similar questions