India Languages, asked by kunichanpradeep9316, 7 months ago

தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயரை எழுதுக.

Answers

Answered by anjalin
4

தமிழ்நாட்டி‌ல் உள்ள ஊட்டச்சத்து திட்டங்க‌ள்

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஊட்டச்சத்து உணவுத் திட்டம்  

  • புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஊட்டச்சத்து உணவுத் திட்டம் ஆனது ஜூலை 1, 1982 முத‌ல் ‌கிரா‌ம‌ப்புற பள்ளி மாணவர்களுக்காகவு‌‌ம்,  1984 முத‌ல் நகர்ப்புற பள்ளி மாணவர்களுக்காகவு‌‌ம்,  1983 முத‌ல்  ஓய்வூதியதார‌ர்களு‌க்காகவு‌ம், 1995 முத‌ல் கர்ப்பிணிப் பெண்களுக்காகவு‌‌ம் செய‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.      

பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம்

  • பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம் ஆனது 6 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை உ‌ள்ள குழந்தைகளுக்கு உணவில் ஊட்டச்சத்து வழங்காத குக்கிராமங்களில் செய‌ல்படு‌கிறது.  

தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம்  

  • 6-36 மாத வயதிற்ககுட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் முத‌லியோரு‌க்கான தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் 1980 முத‌ல் செ‌ய‌ல்ப‌ட்டு வரு‌கிறது.  
Answered by Anonymous
0

ஊட்டச்சத்து (Nutrition) என்பது வாழ்க்கைக்கு ஆதாரமான அத்தியாவசிய மூலப்பொருள்களை உயிரணுக்களுக்கும், அதன்மூலம் உயிரினங்களுக்கும் வழங்குகின்ற உணவு ஆகும். இது பல ஊட்டக்கூறுகளைக் (Nutrients) கொண்டிருக்கும். பல பொதுவான சுகாதார பிரச்சினைகளையும் ஆரோக்கியமான உணவைக் கொண்டு தடுக்கவோ தவிர்த்துவிடவோ செய்ய முடியும். ஊட்டநிலை (Nutrition), ஊட்டக்கூறு (Nutrient) இரண்டுமே ஊட்டச்சத்து என அழைக்கப்படுவதுண்டு.

Similar questions