அப்பூதியடிகள் எவ்வெவற்றுக்கெல்லாம் திருநாவுக்கரசு எனப் பெயர் வைத்தார்?
குறுவினாக்கள்
பெரியபுராணம்
Answers
விடை:
திருநாவுக்கரசரிடம் தாம் கொண்ட பக்தியினால் அப்பூதியடிகள் தம் வீட்டில் உள்ள படி, மரக்கால், தராசுக்கோல், தம் மக்கள், பசு, எருமை ஆகிய எல்லாவற்றிற்கும் திருநாவுக்கரசர் பெயரையே இட்டு வழங்கி வந்தார்.
விளக்கம்:
அப்பூதியடிகளார் திருநாவுக்கரசரின் திருப்பெயரை ஓதி பல்வேறு தொண்டுகள் புரிந்து சிவப்பேறு பெற்ற அந்தணர். அப்பூதியார் சிவனிடமும் சிவனடியார்களிடமும் பேரன்பு கொண்டவர்; களவு, பொய், காமம் முதலிய குற்றங்களினின்றும் நீங்கியவர். அப்பூதியடிகள் சைவ சமய குரவருள் ஒருவராகிய திருநாவுக்கரசரின் சிவபக்திச் சிறப்பையும், சிவபெருமான் அவருக்கு அருள் செய்த திறத்தையும் கேட்டு, அவரை காணும் பேராவலுடையவராயிருந்தார்.
அப்பூதியடிகளார் திருநாவுக்கரசர் மீது கொண்ட நிகரில்லா பக்தியால், தம் குழந்தைகள் மற்றும் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டினார்.