திருநாவுக்கரசர் தண்ணீர்ப்பந்தலைக் கண்டு வியந்த நிகழ்ச்சியைத் தொகுத்து எழுதுக.
நெடுவினாக்கள்
பெரியபுராணம்
Answers
விடை:
அப்பூதியாரின் தண்ணீர்ப்பந்தல் :
திருநாவுக்கரசர், திருப்பழனத்தில் இறைவனை வணங்கித் திங்களூர் வழியாய் வந்தார். அளவில்லாத மக்கள் இடைவிடாமல் செல்லும் வழியின் ஓரத்தில் ஒரு தண்ணிர்ப்பந்தல் அமைந்திருப்பதைக் கண்டார். அது அருள் நிறைந்த பெரியோர்களின் மனத்தைப் போன்ற குளிர்ச்சியுடையதாக, கோடையால் உண்டாகும் துன்பத்தைப் போக்கும் நீர் நிரம்பிய பெரிய தடாகத்தைப் போலக் குளிர்ச்சி பொருந்திய சூழல் உடையதாகவும் இருந்தது.
தண்ணீர்ப்பந்தலில் தம் பெயர் காணல்:
இளம் தென்றல் காற்று தவழ்ந்து வீசும் குளிர்ச்சி பொருந்திய பந்தலோடு, அங்கு வழங்கப்படும் அமுதம்போன்ற இனிமையான குளிர்ந்த நீரையும் கண்டு, மனத்தில் வியப்புடையவராய் அத்தண்ணீர்ப்பந்தலைச் சுற்றிப் பார்த்து வந்தார். அதன் எல்லாப் பக்கங்களிலும் திருநாவுக்கரசர் என்னும் தம் பெயர் அழகாய் எழுதப்பட்டிருந்ததை தம் கண்களால் கண்டார். தம் பெயர் இட்டதன் காரணம் யாதோ? : குற்றமற்ற மொழிகளைப் பேசுபவராகிய நாவுக்கரசர், "கங்கையைத் தரித்த சடைமுடியை உடையவராகிய சிவபெருமானின் அடியவர்களுக்காக நீங்கள் வைத்துள்ள தண்ணிர்ப்பந்தலின் முகப்பில் உங்கள் பெயரை எழுதாமல் வேறொருவர் பெயரை எழுதி வைத்துள்ளமைக்கு காரணம் என்ன?" என அப்பூதியடிகளார் எதிர் நின்று கேட்டார்.
திருநாவுக்கரசரின் வியப்பு :
திருநாவுக்கரசர் அவ்வாறு கேட்டதும், கேட்டது திருநாவுக்கரசர் என்பதறியாத அப்பூதியார் கடுஞ்சினம் கொண்டு “கல்லோடு சேர்த்து கடலில் எரிந்தபோது அக்கல்லையே தெப்பமாய் கொண்டு கடல் கடந்து கரையேறிய நாவுக்கரசர் பெருமையை அறியாதாரும் உளரோ? மங்கலமாகிய சிவனடியார் வேடத்திலிருந்தும் இவ்வாறு கேட்டீரே? நீர் யார்?" என்று கேட்டார். இம்மொழி கேட்ட நாவுக்கரசர் அப்பூதியடிகளின் அன்பைக் கண்டு பெரிதும் வியந்து நின்றார்.