காதிபடங்கள் மட்டுமன்றிக் கருதுபடங்கள் செய்திப்படங்கள் விளக்கப்படங்கள் கல்விப்படங்கள் எனப் பல வளர்ச்சி நிலைகளைத் திரைப்படத்துறை எட்டியுள்ளது.
நிறுத்தக்குறி இடுக / Mark punctuations
திரைப்படக் கலை உருவான விதம்
Answers
விடை:
கதைப்படங்கள் மட்டுமன்றிக் கருத்துப்படங்கள், செய்திப்படங்கள், விளக்கப்படங்கள், கல்விப்படங்கள் எனப் பல வளர்ச்சி நிலைகளைத் திரைப்படத்துறை எட்டியுள்ளது.
விளக்கம்:
கேள்வியில் " காதிபடங்கள்" என்பதை கதைப்படங்கள் என்று படிக்கவும்.
தொடக்கத்தில் திரைப்படங்கள் பேசும் படங்களாக இராமல் ஊமைப் படங்களாக இருந்தன. பிறகு, கதைப்படங்கள், கருத்துப்படங்கள், செய்திப்படங்கள், விளக்கப் படங்கள், கல்விப் படங்கள் எனப் பல வளர்ச்சி நிலைகளைத் திரைப்படத்துறை அடைந்துள்ளது.
கதைப்படங்கள் என்பது ஒரு கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுபவை. ஒரு நிகழ்வை மட்டும் எடுத்துக்கொண்டு அதைப்பற்றி முழு விளக்கம் தருவது விளக்கப்படமாகும். கல்வி கற்பிப்பதற்கென உருவாக்கப்படும் படங்கள் கல்விப்படங்கள் எனப்படும். சமூக சிந்தனைகள், வரலாறு, அறிவியல், கல்வி மற்றும் துறைசார் தகவல்கள் என பலதரப்பட்ட செய்திகள் புனைவுகள் இல்லாமல் யதார்த்தமாக சொல்வது செய்திப்படங்கள் ஆகும்.