India Languages, asked by StarTbia, 1 year ago

மொழிமாற்றம் என்றல் என்ன?
குறுவினாக்கள்
திரைப்படக் கலை உருவான விதம்

Answers

Answered by gayathrikrish80
1

விடை:


ஒரு மொழிப்படத்தை மற்ற மொழிகளில் மாற்றி அமைக்கும் முறைக்கு மொழி மாற்றம் என்று பெயர்.


விளக்கம்:


திரைப்படமானது கலை என்ற நிலையைக் கடந்து, ஏராளமான பொருளீட்டுவதற்கான வாய்ப்பாக மாறியதால், தயாரிப்பாளர்கள், ஒரு மொழியில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தினைப் பிற மொழிகளில் மொழிமாற்றம் (Dubbing) செய்யத் தொடங்கினர். உலகமெங்கும் சந்தையை விரிவுபடுத்த வேண்டுமெனில் மொழி மாற்றம் அவசியம் என்பதை அறிந்து கொண்டனர். புதிய தொழில்நுட்பம், இயந்திரங்களின் மூலம் மொழிமாற்றம் (Dubbing) செய்வதனை ஊக்குவித்தது.


இதனால் ஒரு மொழி பேசிய திரைப்படம், இன்னொரு மொழிபேசும் திரைப்படமாக மாற்றமடைவது எளிதானது. நாளடைவில் ‘மொழிமாற்றம்’ என்பது பெரும் வியாபாரத் துறையாக மாறியது.

Similar questions