India Languages, asked by StarTbia, 1 year ago

குறட்டை ஒலி கதையின் கருதும் பொருளும் மாறாமல் சுருக்கி எழுதுக
நெடுவினாக்கள்
குறட்டை ஒலி

Answers

Answered by gayathrikrish80
60

விடை:


மூன்று குடும்பங்கள் :


ஒரு குடியிருப்பில் கீழே வடக்குப் பகுதியில் ஒன்று, தெற்குப் பகுதியில் ஒன்று, மாடியில் ஒன்றுமாய் மூன்று குடித்தனங்கள் இருந்தன. தென்பகுதிக் குடும்பம் கணவன், மனைவி, ஆறு குழந்தைகள், பாட்டி ஒருத்தி, ஒரு நாய் எனப் பெரிய, வறுமையானக் குடும்பம். வடபகுதிக் குடும்பம் செல்வக் குடும்பம். கணவன், மனைவி தவிர வேறு எவரும் இலர். குழந்தைச் செல்வம் பெறாதவர். மாடியில் இருந்த குடும்பம் கீழே உள்ள குடும்ப நிகழ்ச்சிகளைப் அவ்வப்போது பார்ப்பார்கள். 


வறுமையின் பண்பும் செல்வத்தின் பண்பும் : 


தென்பகுதிக் குடும்பத்தில் எப்பொழுதும் கூச்சலும் ஆரவாரமும் இருக்கும்; பாட்டியின் இருமல் ஒலி, பாக்கு உலக்கையால் வெற்றிலை பாக்கை நறுக்கும் ஒலி, நாயின் குலைப்பு ஒலி, குழந்தைகளின் அமர்களம் என்று வீட்டின் சுறுசுறுப்பைத் தெரிவிக்கும். வடபகுதிக் குடும்பம் அமைதியாய் இருக்கும். அங்கே தும்மல், இருமல், ஏப்பம், வேறு ஒலிகளைக் கேட்க முடியாது.


ஏழைக் குடும்பத்தில் புதிய வரவுகள் :


ஏழையின் மனைவி ஒரு நாள் இரவு ஏழாவது குழந்தையைப் பெற்றாள். அந்தக் குடும்பத்திலும் இந்த உலகத்திலும் புதிய வரவு ஒன்று சேர்ந்தது. அந்தக் குடும்பத்தில் இருந்த ஆரவார ஒலியுடன் ஒரு குழந்தையின் அழுகை ஒலியும் கூடியது. சில நாள்களில் அந்த வீட்டின் நாயும் ஐந்து குட்டிகளை ஈன்றது. குட்டி ஈன்ற மூன்றாம் நாள், தாய்நாய் வெளியே சென்றது; வீடு திரும்பவில்லை. ஐந்து குட்டிகளும் கய்ங், கய்ங் என்று ஓயாமல் கத்தின; ஆம்! அவை பால் இல்லாமல் கத்தின! பெரிய பையன்கள் இருவர் வெளியே சென்று தாய்நாயைத் தேடினார்கள்; நாய் கிடைக்கவில்லை. மாலையில் வீடு திரும்பிய கணவரிடம் அவர் மனைவி, பெரிய நாய் வீடு திரும்பாததைப்பற்றியும், குட்டிகளின் ஓலத்தைப்பற்றியும் முறையிட்டாள். அவர், நாய்க்குட்டிகளைப் பார்வையிட்டார்; 'பொழுதும் போயிற்றே! முனிசிபாலிட்டியார் பிடித்துக்கொண்டு போயிருப்பார்கள்!' என்றார் அவர். நாய்க்குட்டிகளைத் தூக்கிப் போடுங்கள் : மாலை நேரத்தில் நாய்க்குட்டிகளின் "கத்தல் அதிகரித்தது. அந்த ஒலி, செல்வர் குடும்பத்திற்குத் துன்பத்தைத் தந்தது; ‘தங்களின் தூக்கம் கெடுமே’ என்று அஞ்சினர். எனவே, மாடியில் இருப்பவரின் மனைவியிடம் செல்வரின் மனைவி "நீங்கள் சென்று, அந்த நாய்க் குட்டிகளைத் தெருவில் தொலைவில் கொண்டுபோய் விடச் சொல்லுங்கள்; அந்தக் குட்டிகளை வருவார் போவார் எடுத்துச்செல்வர்." என்று முறையிட்டார். 


மாடிவிட்டு அம்மையார் கீழே சென்று தெரிவித்தபோது, “மூன்று நாள் குட்டிகளை வெளியே விட்டால் செத்துவிடும். இந்தச் சின்னஞ்சிறு குட்டிகளை வளர்ப்பது கடினம். இராப்பொழுது கழிந்தால், மறுநாள் காலையில் முனிசிபாலிடிக்குப் பணம் கட்டி, நாயை மீட்டு வரலாம்; குட்டிகளையும் காப்பாற்றலாம்" என்றாள் அந்த ஏழைத்தாய். கதவு, சன்னல் எல்லாவற்றையும் சாத்திக்கொண்டு தூங்குமாறு வடக்குப் பகுதி வீட்டாருக்குச் சொல்லிய பின்னர் மாடிக்கு அந்த அம்மையார் திரும்பினார்.


ஏழைத்தாயின் தாயுள்ளம் :


அந்த வீட்டில் குட்டிகளின் ‘கய்ங், கய்ங்' ஒலி தவிர வேறு ஒலி கேட்கவில்லை. ஒரே முறை மட்டும் வடபகுதியாரின் ஏப்பம் விட்ட ஒலி கேட்டது. குட்டிகளின் ஒலி, பொறுக்க முடியாத எல்லைக்குச் சென்றது. திடீரென்று படிப்படியாய்க் குட்டிகளின் ஒலி குறைந்தது. மேலே இருந்தவர் நாய்க்குட்டிகளின் ஒலி குறைந்ததற்குக் காரணம் அறிய, கீழே எட்டிப் பார்த்தார். அந்த அம்மையார் கையில் இருந்த கொட்டாங்குச்சியில் சிறிது பால் இருந்தது. பஞ்சு போன்ற ஒன்றால் பாலில் நனைத்து ஒவ்வொரு குட்டியின் வாயிலும் வைத்தார். குட்டிகள் அதனைச் சுவைத்து அமைதியடைந்தன. ஒவ்வொரு ஒலியும் அடங்கியது. 


இளங் குழந்தையைப் பெற்ற ஏழைத் தாயின் தாய்மை உணர்வு நம்மை வியக்க வைக்கிறது. வடக்குப் பகுதி வீட்டாரிடமிருந்து குறட்டை ஒலி வந்து கொண்டிருந்தது. அவர்கள் எந்தத் துன்பமும் இல்லாமல் நிம்மதியாய்த் தூங்குவதை அந்தக் குறட்டை ஒலி உணர்த்தியது.

Similar questions