சித்தமருத்துவம் குறித்த செய்திகளை எழுதுக.
சிறுவினாக்கள்
தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்
Answers
விடை:
பதிணென் சித்தர்கள் வளர்த்த மருத்துவம் சித்தமருத்துவம் எனப்படும். அகத்தியர், தேரையர், போகர், புலிப்பாணி போன்றோர் இன்றும் மக்கள் பிணி அகற்றும் மருத்துவ நூல்களை எழுதியுள்ளனர். உலகில் பின் விளைவுகளற்ற மருத்துவங்களில் சித்தமருத்துவமும் ஒன்று. இன்று புகழ்பெற்று வரும் இயற்கை மருத்துவம் என்னும் மருந்தில்லா மருத்துவ முறையை, அன்றே நம் தமிழர் கண்டறிந்துள்ளனர்.
விளக்கம்:
உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்பார் திருமூலர். உடலை ஓம்பவேண்டியதன் இன்றியமையாமைத் தமிழர் அறிந்திருந்தனர். திருவள்ளுவர் 'மருந்து' என்னும் ஓர் அதிகாரத்தையே படைத்துள்ளார். உடல் உறுதியாய் இருப்பதற்கு வாதம், பித்தம், கபம் இம்மூன்றின் சமநிலை தவறும்போது நோயமிகும்.
அவற்றை சமப்படுத்த இயற்கை தரும் காய்கறிகளிலிருந்தே மருந்து கண்டு உண்டனர். பதிணென் சித்தர்கள் வளர்த்த மருத்துவம் சித்த மருத்துவம் என்றாயிற்று.