தமிழரின் மருத்துவ அறிவுகுறித்துக் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
நெடுவினாக்கள்
தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்
Answers
விடை:
தமிழரின் மருத்துவ அறிவு குறித்துக் கூறும் செய்திகள் பின்வருமாறு:
தொன்மை :
'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்பார், திருமூலர். உடலை ஓம்பவேண்டியதன் இன்றியமையாமையைத் தமிழர் அறிந்திருந்தனர். திருவள்ளுவர், மருந்து என்னும் ஓர் அதிகாரத்தையே படைத்துள்ளார். "மருந்தாகித் தப்பா மரத்தற்றால்" என்னும் திருக்குறள் தமிழ் மருத்துவத்தின் தொன்மையை எடுத்தியம்பும். பதினெண்சித்தர்கள் வளர்த்த மருத்துவமே இன்றைய சித்த மருத்துவமாயிற்று.
உணவே மருந்து:
உடல் உறுதியாய் இருப்பதற்கு வாதம் பித்தம், சீதம் ஆகிய மூன்றன் சமநிலையே காரணமாகும். அவற்றின் சமநிலை தவறும்போது நோய் மிகும். அவற்றைச் சமப்படுத்தப் பண்டைத் தமிழர் காய்கனிகளிலிருந்தே மருந்து கண்டு உண்டனர்.
பின்விளைவுகளற்ற மருந்தில்லா மருத்துவம் :
தேரையர், அகத்தியர், போகர், புலிப்பாணி முதலிய சித்தர்களின் மருத்துவ நூல்கள் இன்றும் தமிழர்களின் உடற்பிணியைப் போக்குகின்றன. உலகில் பின்விளைவுகளற்ற மருத்துவங்களுல் சித்த மருத்துவமும் ஒன்று. இன்று பரவலாய்ப் பயின்று வரும் இயற்கை மருத்துவம் என்னும் மருந்தில்லா மருத்துவ முறையை, அன்றே நம் தமிழர் கண்டறிந்துள்ளனர். மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். - என்னும் திருக்குறள் இக்கருத்திற்கு அரண் சேர்க்கிறது.
அறுவை சிகிச்சை முறையை அறிந்திருத்தல் :
மணிமேகலையில் தோழி சுதமதியின் தந்தையை மாடு முட்டியதால் அவரது குடல் சரிந்தது. சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியை மணிமேகலை எடுத்துரைக்கிறது. ‘கண்ணிடந் தப்பிய கண்ணப்பன்’ வரலாறும், மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றன.
Explanation:
Please write correctly by seeing the subtopic .
Hope it helps...