சீறாப்புராணம் __________ காண்டங்களைக்கொண்டது.
1மூன்று 2ஐந்து 3ஏழு
உரிய விடையைத் தேர்த்தெழுதுக
சீறாப்புராணம்
Answers
விடை:
சீறாப்புராணம் மூன்று காண்டங்களைக்கொண்டது.
விளக்கம்:
சீறா + புராணம் = சீறாப்புராணம்; ‘சீறத்’ என்னும் அரபுச் சொல்லின் திரிபே சீறா என்பது. சீறத் என்னும் அரபுச் சொல்லுக்கு வரலாறு என்பது பொருள். இது நபிகள் நாயகத்தின் வரலாற்றைக் கூறும் நூலாதலால் சீறாப்புராணம் என வழங்கலாயிற்று.
சீறாப்புராணம் மூன்று காண்டங்களைக் கொண்டது. அவை:
1) விலாதத்துக் காண்டம்
இதில் நபிகள் நாயகத்தின் பிறப்பும், இளமை, தொழில் முயற்சி முதலியவை கூறப்படுகின்றன.
2) நுபுவ்வத்துக் காண்டம்
இதில் நபிகள் நாயகம் நபித்துவம் பட்டம் பெற்றதையும், முஸ்லீம்களின் பொறுமை மற்றும் சமயப்பற்று முதலியவை கூறப்படுகின்றன.
3) ஹிஜ்ரத்துக் காண்டம்
ஹிஜ்ரத் காண்டத்தில் அவர் இசுலாமிய அறநெறியை வளர்த்த வரலாறு விவரிக்கப்படுகிறது. நபிகள் நாயகத்தின் ஐம்பத்தேழாவது வயதுவரை நடந்த நிகழ்ச்சிகளோடு சீறாப் புராணம் நிறைவு அடைகிறது.