India Languages, asked by StarTbia, 11 months ago

1. தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி குறித்து விரிவாக எழுதுக.
நெடுவினாக்கள் / Long answer questions
36 பல்துறை வேலைவாய்ப்புகள்
235 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
2

விடை:


தொழிற்  கல்வி:


மருத்துவம், பொறியியல், வேளாண்மை சட்டம் முதலியவை தொழிற் கல்வித் துறைகள். மேனிலைக் கல்வியில் உயர் மதிப்பெண் பெற்றோர் அந்தந்தப் பாடப்பிரிவின் தகுதிக்கேற்ப விண்ணப்பிக்கலாம். இவர்கள் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, கல்லூரிகளில் சேர்ந்து, உரிய காலத்தில் படித்து முடிப்பர். படித்து முடித்தவர்கள் அவரவர் தகுதிக்கேற்ப உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பணிபுரிய வாய்ப்புண்டு.


சிறந்த வேலைவாய்ப்புத் துறைகள் :


தற்போது உயிரி - தொழில் நுட்பத்துறை, நுண்ணியல் தொழில் நுட்பத்துறை சார்ந்த தொழிற்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. வேதியியல், விலங்கியல் ஆகிய துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கும், சுற்றுச்சூழல், வேளாண்மை, மருத்துவம் முதலிய துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கும் சிறந்த வேலைவாய்ப்புத் துறைகள் தற்போது கிடைக்கின்றன.


தொழில்நுட்பக் கல்வி :


பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், தாம் பெற்ற உயர் மதிப்பெண்களுக்கு ஏற்பப் பல்துறை  தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து பயிலலாம். பொறியியல் துறைகளில் உள்ளது போலப் பல்வேறு துறைகள் இதிலும் உண்டு. இதில் சேர்ந்து படிப்பவர்களுக்கும் இக்கால கட்டத்தில் நிறைய வேலை வாய்ப்புகள் பெறுவதற்கு வாய்ப்புண்டு.

Similar questions