1. தமிழகத்தின் நூலகத் துறையின் வளர்ச்சிபற்றிக் கட்டுரை எழுதுக
நெடுவினாக்கள் / Long answer questions
37 நூலகம்
240 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
விடை:
முன்னுரை :
நாடு முன்னேற கல்வியறிவு பெற்றவர்களாகவும் நற்சிந்தனையாளராகவும், வல்லுனர்களாகவும் மக்கள் மாற வேண்டுவது இன்றியமையாதது. இது மெய்ப்பட பல்துறை நூல்களடங்கிய பொது நூலகங்கள் நாடு முழுவதும் அமைவது இன்றியமையாதது. தனி ஒருவரிடம் இருக்கும் நூல்களால் யாதொரு பயனும் இல்லை. பொதுநூலகத்தில் அவை இருக்குமாயின் ‘பயன்மரம் உள்ளூர் பழுத்ததைப் போன்று’ அனைவருக்கும் பயன்படும். அதனால் பன்னாடுகள் முழுவதும் மக்களுக்கான பொது நூலகங்கள் திறக்கப்பட்டன.
இந்தியாவின் முதல் நூலகச் சட்டம் :
நம் நாட்டில் முதன்முதலாக தமிழகத்தில் தான் 1948 ஆம் ஆண்டு சென்னை பொது நூலகச் சட்டம் இயற்றி நூலகப் பணிகளின் சீரான செயல்பாட்டிற்கு வித்திடப்பட்டது. நூலகப் பயன்பாட்டிற்கான விதிகளை உருவாக்கித் தந்தவர் சீர்காழி சீ.இரா. அரங்கநாதன் அவர்கள். அவர் ‘இந்திய நூலகத்தின் தந்தை’ எனப் போற்றப்படுகிறார்.
தமிழரும் நூலகமும் :
’ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’. இது பழமொழி. ‘நூலகமில்லா ஊருக்கு அறிவு பாழ்’ என்பது புதுமொழி. இதனை நன்குணர்ந்த தமிழர்கள் இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே சிறப்பான நூலகங்களை அமைத்து செயல்பட்டுள்ளனர். தஞ்சை சரசுவதி மகால் நூலகம் 1820 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இரு நூற்றாண்டுகளை நெருங்கி நிற்கும் பழமையான இந்நூலகம் பல்துறை ஓலைச் சுவடிகளையும் அச்சிட்ட நூல்களையும் ஆயிரக்கணக்கில் கொண்டு அப்பகுதி மக்களின் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்கிறது. கன்னிமாரா நூலகம் (1869), சென்னைப் பல்கலைக்கழக நூலகம் (1907), அண்ணாமலை பல்கலைக்கழக நூலகம் - சிதம்பரம் (1929), டாக்டர் உ.வே.சா. நூலகம்- சென்னை (1947), மறைமலை அடிகளார் நூலகம் – சென்னை (1958), மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகம் (1966), உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகம் – சென்னை (1970), தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நூலகம் (1981), அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம் ஆகியன நம் தமிழகத்தில் அமைக்கப்பட்ட பெரும் பெரும் நூலகங்களாகும். அவற்றின் காலவரிசையைக் கணக்கிட்டால் தமிழரின் அறிவுத்துறை வளரச்சி யாவருக்கும் முன்னோடியாகத் திகழ்வதைக் காணலாம்.
நடமாடும் நூலகம் :
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி என்னும் நகருக்கு அருகில் உள்ள மேலவாசல் என்னும் சிற்றூரில் கனகசபை பிள்ளை என்பவர் 1931-ல் மாட்டுவண்டி ஒன்றில் நடமாடும் நூலகத்தை அமைத்து பணியாற்றினார். இந்நிகழ்வு நம் தமிழர் அணையா அறிவுத்தாகத்திற்கு நூலகம் இன்றியமையாமையை உணர்ந்திருந்ததை நன்கு உணர்த்தும்.
பள்ளி, கல்லூரி கல்வி நூலகங்கள் :
பள்ளி, கல்லூரிகள் என்பது பாடநூல்களைக் கொண்டு அறிவை விதைக்கும் களம். ஆனால் மாணவர்கள் ஆய்வுத்திறனோடு தம் அறிவை செழுமைப்படுத்த வேண்டும் என்றால் பல்துறை நூல்களும் அடங்கிய நூலகம் வேண்டும். உலகம் முழுவதும், பள்ளி, கல்லூரிகளில் நூலகங்கள் அமைந்திருக்க வேண்டும் என்பது கட்டாய சட்டமாக்கப்பட்டது. அதன்படி நம் தமிழக அரசும் நூலகங்களை அமைத்துள்ளதுடன், நூலகம் ஓரிடம் வகுப்பறை வேறிடம் என்றில்லாமல் வகுப்பறைக்குள்ளேயே நூலகத்தையும் அமைக்க ‘புத்தகப் பூங்கொத்து’ என்னும் வகுப்பறை நூல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
முடிவுரை :
பொருளாதார இடர்பாடுள்ள மாணவர்களும், மக்களும் தமதறிவை செழுமைப்படுத்தி பயன் பெறும் வகையில் செயலாற்ற பொது நூலகங்களே சிறப்பானதாகும். இதுவறிந்த தமிழர்கள் தம் அரசினைக் கொண்டு சிற்றூர் முதல் பெரும் நகரங்கள் வரை ஆயிரக்கணக்கான அரசு பொது நூலகங்கள் நிறுவியுள்ளனர்.
அறிவு வளரவும் ஆற்றல் மிளிரவும் நூல்களை படிப்போம். நூல்களை பேணிக்காக்கும் நூலகங்களைப் போற்றிக் காப்போம்.
- பள்ளி நூலகம் (அல்லது பள்ளி நூலக ஊடக மையம்) என்பது ஒரு பள்ளிக்கூடத்தில் உள்ள ஒரு நூலகமாகும், அங்கு மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பெரும்பாலும், ஒரு பொது அல்லது தனியார் பள்ளியின் பெற்றோர்கள் பலவிதமான வளங்களை அணுகலாம். பள்ளி நூலக ஊடக மையத்தின் குறிக்கோள், பள்ளி சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் "புத்தகங்கள் மற்றும் வாசிப்பு, தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்" ஆகியவற்றுக்கு சமமான அணுகல் இருப்பதை உறுதி செய்வதாகும். ஒரு பள்ளி நூலக ஊடக மையம் "அனைத்து வகையான ஊடகங்களையும் பயன்படுத்துகிறது .
- நூலகம் பயன்கள்
நூலகம் அறிவை வளர்க்கும் ஓர் இடமாகும். வாழ்வியல், வரலாறு, இலக்கியம், நிலநூல், மேற்கோள் நூல்கள், சிறுகதைகள், மனோதத்துவம், வார, மாத சஞ்சிகைகள், நாளிதழ்கள் அனைத்தும் நூலகங்களில் கிடைக்கும்.
3. நம் நாட்டில் கிராமம் முதல் நகர்ப்புறங்களிலும் நூலகங்கள் இருக்கின்றன. அத்துடன் தேசிய நூலகம், பொது நூலகங்களும், மற்றும் நடமாடும் நூலகங்களும் இருப்பினும் அதனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் படித்துப் பயனடையும் வகையில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.