India Languages, asked by StarTbia, 1 year ago

1. கம்பராமாயணம் - சிறு குறிப்பு எழுதுக
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter10 கம்பராமாயணம்-
Page Number 67 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
37
கம்பரால் இயற்றப்பட்ட ராமாயணம் கம்ப ராமாயணம் ஆகும். இது வடமொழியில் வால்மீகி என்பவர் இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நூல்.  இது ஒரு வழி நூலாகவே இருந்தாலும் கம்பர் தனக்கே உரித்தான பாணியில் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளார்.


கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 119 படலங்களையும் உள்ளடக்கியது. காண்டம் என்பது பெரும் பிரிவையும், படலம் என்பது உட்பிரிவையும் குறிக்கிறது.


தமிழ் இலக்கியத்தின் உச்சம் தொட்ட இக்காவியம் மற்றும் திருக்குறளின் சிறப்பு கருதி, இவ்விரு நூல்களையும் "தமிழுக்குக் கதி" என்பர்.   கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது. சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்டு தமிழ்ப்பண்பாட்டோடு இயைந்து விளங்குவது.


Answered by navinsachinsalem
9

Answer:

kambaramayanam..... pavil iyatrapattathu

Similar questions
Math, 7 months ago