India Languages, asked by StarTbia, 1 year ago

1. சீர் பிரித்து எழுதுக:
ஒழுக்கமுடைமைகுடிமைஇழுக்கம்இழிந்தபிறப்பாய்விடும்
பிரித்து எழுதுக / split the words
Chapter2 திருக்குறள் -
Page Number 9 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
4

விடை:

ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்



விளக்கம்:

இந்த குறள் ஒழுக்கமுடைமை  அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.

ஒழுக்கம்  உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்

(அதிகாரம்: ஒழுக்கமுடைமை  குறள் எண் : 133


ஒருவரின் குடிக்கு சிறப்பு அல்லது பெருமை அவரின் நல்லொழுக்க நெறியினாலே உண்டாவது. நல்லொழுக்கம் பேணிக் காக்கப்படவில்லை எனில் இழிநிலை அல்லது தாழ்ந்த நிலைக்கு தள்ளப்படுகிறார். ஒருவருக்கு உயர்குடித்தன்மை அவரின் பிறப்பால் வருவதன்று; அவரின் நல்லொழுக்க நெறியால் வருவது ஆகும்.


எனவே, தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.

Similar questions