2. உவமையைப் பொருளோடு பொருத்தி எழுதுக:
கொக்கொக்க கூம்பும் பருவத்து
உவமையைப் பொருளோடு பொருத்தி எழுதுக / Explain the gramatical context
Chapter2 திருக்குறள் -
Page Number 9 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
உவமை :
கொக்கு தனக்குரிய இரையாகிய பெரிய மீனை எதிர் பார்த்து அமைதியாய்க் காத்திருந்து, அம்மீன் வந்தவுடன் தவறாமல் குத்தி எடுத்துக்கொள்ளுதல்.
உவமேயம் :
ஒரு செயலைச் செய்வதற்கு ஏற்ற காலம் வாய்க்காதபோது அமைதியாய் இருந்து, அதற்கான காலம் வாய்த்ததும் அச்செயலைத் தவறாமல் செய்து முடித்தல்.
உவம உருபு :
ஒக்க
பொருத்தம் :
காலத்தை எதிர்பார்த்துக் காத்திருத்தலுக்கு இரையை எதிர்பார்த்துக் காத்திருத்தல் உவமையாகும். காலம் வாய்த்தபோது செயலாற்றி முடிப்பதற்கு, இரை கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தவுடன் விரைந்து செயல்படுதல் உவமையாகும்.
உவமை விளக்கம் :
இரையை எதிர்பார்த்திருக்கும் கொக்கினைப் போல் காத்திருந்து, அது தக்க இரையைக் கண்டவுடன் செயல்படுவது போல விரைந்து செயல்பட்டு ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும்.
Similar questions
Hindi,
8 months ago
English,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Geography,
1 year ago