India Languages, asked by StarTbia, 1 year ago

2. ஊக்க முடையான் ________ பொருதகர்
தாக்கற்குப் _______ தகைத்து.
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
Chapter2 திருக்குறள் -
Page Number 9 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


ஊக்க முடையான் ஒடுக்கம்  பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து


விளக்கம்:


இந்த குறள் காலமறிதல் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.

ஊக்க முடையான் ஒடுக்கம்  பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து

 (அதிகாரம்: காலமறிதல் குறள் எண் : 486

ஊக்கமுடையான் – செயலாற்றல் மிக்கவன்
ஒடுக்கம் – அடங்கியிருப்பது (தக்க காலத்தை எதிர்நோக்கி)
பொரு தகர் – சண்டையிடும் ஆடு
தாக்கற்குப் – தனக்கு எதிராகப் பொருது ஆட்டோடு சண்டையிடும் முன்
பேருந் தகைத்து – தன் கால்களை பின்னோக்கிச் செல்வது போல் வைப்பதைப் போலாகும்.

இக்குறள் ஒரு உவமையைச் சொல்லி செயலாற்றலுடன் ஊக்கம் மிக்கவர்கள் ஒடுங்கியிருப்பது பின்பு வேகத்துடன் எழுந்து காலமறிந்து செயலாற்றத்தான் என்கிறது. 


சொல்லப்படும் உவமையானது, ஆட்டைப் மையப்படுத்தியது. ஒரு சண்டையிடும் ஆடு, காலை பின்னோக்கி வைத்து, பின்வாங்குவதுபோல தோற்றமளித்தாலும், அவ்வாறு செய்வது, அது முன்னே பாய்ந்து எதிரியை வீழ்த்தத்தான். 

Similar questions