India Languages, asked by StarTbia, 1 year ago

1. உலகில் உள்ள மொழிகளுள் இலக்கிய, இலக்கண வளமுடைய மொழிகள் எத்தனை?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter4 உயர்தனிச் செம்மொழி -
Page Number 17 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:

உலகில் உள்ள மொழிகளுள் இலக்கிய இலக்கண வளமுடைய மொழிகள் மூவாயிரம்.


விளக்கம்:


உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன என்று மொழியியலார்கள் கூறுகின்றனர். இவற்றுள் இலக்கிய இலக்கண வளமுடைய மொழிகள் மூவாயிரம். இவற்றுள்ளும் ஈராயிரமாண்டுகட்கும் மேற்பட்ட வரலாற்றுத் தொன்மையுடைய மொழிகள் சிலவே. அவை தமிழ், சீனம், சமஸ்க்ருதம், இலத்தீன், ஹீப்ரு, கிரேக்கம் ஆகியன. இவைகளில் கிரேக்கம் மற்றும் ஹீப்ரு வழக்கொழிந்து போயின. இன்றும் நிலைத்து நிற்கும் மொழிகளில் நம் தமிழ் மொழியும் ஒன்று.


தமிழ் மொழி நிலைத்து நிற்பதற்கு இலக்கிய, இலக்கண செழுமை, மிகுதியான சொல்வளம், வரலாற்று பின்னணி, தனித்தியங்கும் மாண்பு, காலத்திற்கேற்ற புதுமை ஆகியவைகளே காரணம்.

Similar questions