1. உயிரினும் ஓம்பப்படுவது எது? ஏன்?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter2 திருக்குறள் -
Page Number 10 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
விடை:
உயிரினும் ஓம்பப்படுவது ஒழுக்கம். ஏனென்றால் அனைத்துச் சிறப்புக்களையும் ஒருவருக்கு தரவல்லது ஒழுக்கம் மட்டுமே.
விளக்கம்:
இந்த கருத்தை கீழ்க்கண்ட குறளில் வள்ளுவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒழுக்கம் விழுப்பம்
தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
(அதிகாரம்: ஒழுக்கமுடைமை குறள் எண் : 131)
ஒருவனின் வாழ்விற்கு முக்கியமானதும் மேலானதும் ஆவது அவனின் உயிர் ஆகும். ஓருவனின் நன்னடத்தை அவனுக்கு மேலான சிறப்பைத் தரும். அந்தச் சிறப்பை உயிரினாலும் தரமுடியாது. ஆதலால் ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாக போற்றி பேணப்படவேண்டும்.
ஒருவன் வெறுமனே உயிர் வாழ்வதால் சிறப்பு ஏற்படாது. நல்லொழுக்க நெறியில் வாழ்வதன் மூலம் உண்டாகும் சிறப்பே அவன் வாழ்வதற்கு ஓர் அர்த்தத்தை உண்டாக்குவதால் அவ்வொழுக்கம் உயிரினும் மேலானதாகப் போற்றப்படவேண்டும்.
Answer:
உயிரினும் ஓம்பப்படுவது ஒழுக்கம். ஏனென்றால் அனைத்துச் சிறப்புக்களையும் ஒருவருக்கு தரவல்லது ஒழுக்கம் மட்டுமே.
Explanation: