கூற்று: 1870இல் வங்காள அரசாங்க ஆணை
இஸ்லாமிய தொழில்வல்லுநர்
குழுக்களிடையே ஐயங்களை
ஏற்படுத்தியது.
காரணம்: அவ்வாணை உருது மொழி பாரசீக –
அரபி எழுத்து முறைக்குப் பதிலாக
இந்தியைக் கொண்டு வந்தது.
அ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை
விளக்கவில்லை.
(ஆ) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
(இ) கூற்று தவறு காரணம் சரி.
(ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
Answers
Answered by
0
கூற்று சரியா தவறா
கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
- பிரிட்டிஷார் நம் நாட்டிற்கு வருவதற்கு முன்பாக முகலாயர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் நாட்டின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்தனர்.
- முகலாயர் காலத்தில் அலுவலக மற்றும் நீதிமன்ற மொழியாக விளங்கியது பாரசீக மொழி ஆகும்.
- 1870 ஆம் ஆண்டு வங்காள அரசு ஒரு ஆணையினை கொண்டு வந்தது.
- அந்த ஆணையின் படி வங்காள நீதிமன்றங்கள் மற்றும் அலுவலங்களில் உருது மொழிக்கு பதிலாக இந்தி மொழி அறிமுகப்படுத்தப்பட்டது.
- மேலும் பாரசீக - அரேபிய எழுத்து வடிவத்திற்கு பதிலாக நாகரி எழுத்து வடிவத்தினை கொண்டு வந்தது.
- இந்த அரசாணை இஸ்லாமிய தொழில் வல்லுநர் குழுக்களிடையே ஐயங்களை ஏற்படுத்தியது.
Similar questions