India Languages, asked by Dhingraarun778, 11 months ago

1896இல் _______ நாடுகள்
ஒருங்கிணைக்கப்பட்டு மலாய் ஐக்கிய
நாடுகள் உருவாக்கப்பட்டது.
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) மூன்று
ஈ) ஆறு

Answers

Answered by adgs7
0

Answer:

6 is the answer

Explanation:

pls make as brainlist

Answered by steffiaspinno
0

1896 இல் நான்கு நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மலாய் ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்டது.

  • 1874 முதல்  1895 வரையுள்ள  ஆண்டுகளுக்கிடையில் எஞ்சியிருந்த ஐந்து சுதேச அரசுகளிடையே  உள்நாட்டுப் போர் நடைபெற்றது.
  • இப்பிரச்சனையில் தலையிட்ட ஆங்கிலேய அரசு  ஒவ்வொரு சுல்தானோடும் ஓர் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டனர்.
  • அந்த  ஒப்பந்தமானது ஒவ்வொரு சுல்தானுடைய அவையிலும் ஓர் ஆங்கிலேய ஸ்தானிகர்  நியமிக்கப்பட வேண்டும்  என்பதாகும்.
  • ஆங்கிலேய ஸ்தானிகர்கள் வழங்கும் ஆலோசனைப்படி சுல்தான்கள்  செயல்பட வேண்டியிருந்தது.
  • 1896ஆம் ஆண்டு  இவற்றில் நான்கு அரசுகள் ஒருங்கிணைக்கப்பட்டு  ஐக்கிய மலாய் நாடுகள் உருவாக்கப்பட்டது.
  • 1900 ஆம் ஆண்டு நீரிணைப்பகுதி குடியிருப்புகள்,  ஐக்கிய மலாய் நாடுகள், ஜகோர் ஆகியவை  ஆங்கிலேயர் வசமிருந்தன.
  • இப்பகுதியின்  மக்கள் தொகை பத்து இலட்சமாக இருந்தது.
  • அதில் மலாய் இன மக்கள் சரிபாதி அளவு இருந்தனர், மற்றவர்கள்  சீனர்களாவர்.
  • பெரும்பாலான வர்த்தகர்கள்,  பண்ணை வைத்திருப்போர், துறைமுகங்களிலும்  பண்ணைகளிலும் பணி செய்யும் தொழிலாளர்கள்  ஆகியோர் சீனர்களாவர்.
  • பொருளாதாரத்தில்  மலேயா செழிப்புற்றுத் திகழ்ந்தது.
Similar questions