1903 - 1914 ஆகிய கால கட்டங்களில் தேசிய
இயக்கம் வளர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த
ஆங்கில அரசு மேற்கொண்ட அடக்குமுறை
நடவடிக்கைகள் என்ன?
Answers
Answered by
1
Answer:
I didn't understand this language....
sry xD
Answered by
0
1903 - 1914 ஆகிய கால கட்டங்களில் தேசிய இயக்கம் வளர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த ஆங்கில அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் :
- 1903ல் கர்சன் பிரபு குற்ற உளவுத் துறையை ஏற்படுத்தி தேசியவாதிகளின் நடவடிக்கையை பற்றிய தகவல்களை சேகரிக்க செய்தார்.
- இது மட்டும் இல்லாமல் 1908 ஆம் ஆண்டு பத்திரிக்கைகள் (குற்றங்களுக்குத் தூண்டும்) சட்டம் மற்றும் வெடிபொருட்கள் சட்டம் கொண்டு வரப்பட்டது.
- 1910 ஆம் ஆண்டு இந்திய பத்திரிகைகள் சட்டம் மற்றும் 1911 ஆம் ஆண்டு தேசத் துரோக கூட்டங்கள் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.
- 1914 ஆம் ஆண்டு வெளி நாட்டினர் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
- இவ்வாறாக 1903 - 1914 ஆகிய கால கட்டங்களில் தேசிய இயக்கம் வளர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த ஆங்கில அரசு அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
Similar questions