1909ஆம் ஆண்டின் மின்டோ-மார்லி
சீர்த்திருத்தங்களின் முக்கியத்துவத்தைக் கூறுக.
Answers
Answered by
0
1909 ஆம் ஆண்டின் மின்டோ-மார்லி சீர்த்திருத்தங்களின் முக்கியத்துவம்
- 1909 ஆம் ஆண்டின் மின்டோ-மார்லி சட்டம் மத்திய சட்டமன்றத்தில் அலுவலர் அல்லாத 27 உறுப்பினர்களுக்கான இடத்தில் 8 இடங்களை மட்டுமே முஸ்லிமுக்கு வழங்கியது.
- ஆனால், மாகாண சட்டமன்றத்தில் முஸ்லிம் வேட்பாளருக்கான இடத்தில் மதராஸ் 4, பம்பாய் 4, வங்காளம் 5 என அளித்து உள்ளது.
- பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்பு வாதத்தை வளர்க்க மற்றும் பரப்ப தனித் தொகுதிக் கொள்கை என்னும் நுட்பத்தினை பயன்படுத்தியது.
- தனித் தொகுதிக் கொள்கை கொண்ட ஆங்கிலேயர்கள் தங்களின் கோட்பாடான பிரித்தாளும் கொள்கை என்ற கோட்பாடை தேர்தலில் கொண்டு வந்து இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை பிரித்தது.
- இந்த வகையான முறையில் முஸ்லிம்கள் மட்டுமே முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும்.
Similar questions